டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 5 காசுகள் சரிந்து ரூ. 95.57 ஆக நிறைவு!
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ஆரம்பக்கட்ட சரிவின் பெரும்பகுதியை ஈடுசெய்து, 5 காசுகள் சரிவுடன் ரூ. 95.57 ஆக வர்த்தகத்தை நிறைவு செய்தது.
மும்பை: கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட மாற்றத்தால், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ஆரம்பக்கட்ட சரிவின் பெரும்பகுதியை ஈடுசெய்து, வர்த்தக முடிவில் 5 காசுகள் சரிவுடன் ரூ. 95.57 ஆக வர்த்தகத்தை நிறைவு செய்தது.
உலகளாவிய சந்தைகளில் நிலவும் முதலீட்டுத் தயக்கம் மற்றும் உயர்ந்து வரும் கச்சா எண்ணெய் விலை ஆகியவை ரூபாயின் மதிப்பை சரிய வைத்ததாக அந்நியச் செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர். இதனால், தொடர்ந்து ஐந்தாவது வர்த்தக நாளாக இன்றும் ரூபாய் மதிப்பு சரிவுடன் நிறைவடைந்தன.
வர்த்தகத்தின் தொடக்கத்தில் ரூபாய் மதிப்பு சரிவுடன் காணப்பட்டாலும், உள்நாட்டுப் பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட சிறிய மீட்சியினால் சரிவை ஓரளவுக்குக் குறைக்க உதவியாதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
Advertisement
Advertisement
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ. 95.70 என்ற அளவில் வர்த்தகத்தைத் தொடங்கி, பிறகான வர்த்தகத்தில் சரிந்து ரூ. 95.79 என்ற குறைந்தபட்ச நிலையை எட்டியது. இருப்பினும், சரிவைச் சரிசெய்து ரூ. 95.51 என்ற உச்சத்தை எட்டியது. வர்த்தக முடிவில் 5 காசுகள் சரிவுடன் ரூ. 95.57 என்ற நிலையில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
The rupee pared most of its initial losses and settled at 95.57 against the US dollar on Friday.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.