FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ரூபாய் மதிப்பு வீழ்ச்சி எதிரொலி: பாமாயில் இறக்குமதி சரிவு!

உலகளாவிய விலையேற்றம் மற்றும் ரூபாயின் மதிப்பு சரிவு ஆகியவற்றால் இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெயின் விலை உயர்ந்த சூழலில், பாமாயில் இறக்குமதி குறைந்தது.

15 செப்டம்பர் 2026, 10:20 pm IST
பாமாயில்
பகிர்:

புதுதில்லி: உலகளாவிய விலையேற்றம் மற்றும் ரூபாயின் மதிப்பு சரிவு ஆகியவற்றால் இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெயின் விலை உயர்ந்த சூழலில், பாமாயில் இறக்குமதி குறைந்ததால், இந்தியாவின் ஒட்டுமொத்த தாவர எண்ணெய் இறக்குமதி ஆகஸ்ட் மாதத்தில் 4.71 சதவீதம் சரிந்து 16.09 லட்சம் டன்னாக குறைந்துள்ளது என்று 'சால்வென்ட் எக்ஸ்ட்ராக்டர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா' தெரிவித்தது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் இந்த இறக்குமதி அளவு 16.94 லட்சம் டன்னாக இருந்தது.

2025-26 ஆம் ஆண்டிற்கான நவம்பர்-ஆகஸ்ட் காலகட்டத்தில், மொத்த தாவர எண்ணெய் இறக்குமதி 4 சதவீதம் அதிகரித்து. இதுவே கடந்த ஆண்டில் 133.37 லட்சம் டன்னிலிருந்து 138.8 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளதாக 'சால்வென்ட் எக்ஸ்ட்ராக்டர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா' தெரிவித்தது.

உலகின் மிகப்பெரிய தாவர எண்ணெய் இறக்குமதியாளரான இந்தியா, ஆகஸ்ட் மாதம் 15.72 லட்சம் டன் சமையல் எண்ணெயையும் 37,150 டன் சமையலுக்குப் பயன்படாத எண்ணெயையும் இறக்குமதி செய்தது. இதுவே கடந்த ஆண்டு இதே மாதத்தில் முறையே 16.88 லட்சம் டன் மற்றும் 55,821 டன்னாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

சுத்திகரிக்கப்பட்ட சமையல் எண்ணெய் இறக்குமதி, கடந்த ஆண்டு இதே மாதத்தில் இருந்த 64,403 டன்னிலிருந்து ஆகஸ்ட் மாதத்தில் 1.01 லட்சம் டன்னாக அதிகரித்தது. அதே வேளையில், கச்சா எண்ணெய் இறக்குமதி 16.24 லட்சம் டன்னிலிருந்து 14.70 லட்சம் டன்னாகக் குறைந்தது.

கச்சா எண்ணெய் பொறுத்தவரை, பாமாயில் இறக்குமதி 9.79 லட்சம் டன்னிலிருந்து 7.60 லட்சம் டன்னாகவும், சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி 2.57 லட்சம் டன்னிலிருந்து 1.55 லட்சம் டன்னாக சரிந்தது. அதே வேளையில், சோயாபீன் எண்ணெய் இறக்குமதி 3.87 லட்சம் டன்னிலிருந்து 5.54 லட்சம் டன்னாக அதிகரித்தது.

நேபாளத்திலிருந்து இறக்குமதி

நேபாளத்திலிருந்து சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்களின் இறக்குமதி குறிப்பிடத்தக்க அளவில் இருந்தது. நவம்பர் 2025 முதல் ஆகஸ்ட் 2026 வரையிலான காலத்தில், நேபாளம் இந்தியாவிற்கு மொத்தம் 5.96 லட்சம் டன் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்களை ஏற்றுமதி செய்தது. இதில் 5.31 லட்சம் டன் சுத்திகரிக்கப்பட்ட சோயாபீன் எண்ணெய், 33,881 டன் சுத்திகரிக்கப்பட்ட சூரியகாந்தி எண்ணெய், 28,728 டன் ஆர்பிடி பாமோலின் மற்றும் 4,428 டன் ரேப்சீட் எண்ணெய் ஆகியவை அடங்கும்.

தெற்காசிய சுதந்திர வர்த்தகப் பகுதி ஒப்பந்தத்தின் கீழ் இறக்குமதி வரி ஏதுமில்லாத சலுகையைப் பயன்படுத்தி, நேபாளம் முக்கியமாக கச்சா சோயாபீன் எண்ணெயை இறக்குமதி செய்து, அதைச் சுத்திகரிக்கப்பட்ட சோயாபீன் எண்ணெயாக இந்தியாவிற்கு மறு-ஏற்றுமதி செய்வதாக 'சால்வென்ட் எக்ஸ்ட்ராக்டர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா' குறிப்பிட்டுள்ளது.

இருப்பு விவரம்

செப்டம்பர் 1 நிலவரப்படி, சமையல் எண்ணெயின் மொத்த இருப்பு 20.43 லட்சம் டன்னாக இருந்தது. இதுவே கடந்த மாதத்தில் இருந்த 20.12 லட்சம் டன் இருப்பை விட 31,000 டன் அதிகமாகும்.

summary

India vegetable oil imports fell 4.71 per cent to 16.09 lakh tonnes in August from 16.94 lakh tonnes a year earlier.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments