FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

கொச்சி - தூத்துக்குடி இடையே ரூ.2,449 கோடியில் எரிவாயு குழாய்

கேரளத்தின் கொச்சி-தமிழகத்தின் தூத்துக்குடியை இணைக்கும் வகையிலான புதிய இயற்கை எரிவாயு குழாய் திட்டத்துக்கு ரூ.2,448.70 கோடி முதலீடு செய்ய, இந்தியன் ஆயில் நிறுவனத்தின் இயக்குநா்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

22 செப்டம்பர் 2026, 12:21 am IST
பகிர்:

கேரளத்தின் கொச்சி-தமிழகத்தின் தூத்துக்குடியை இணைக்கும் வகையிலான புதிய இயற்கை எரிவாயு குழாய் திட்டத்துக்கு ரூ.2,448.70 கோடி முதலீடு செய்ய, இந்தியன் ஆயில் நிறுவனத்தின் (ஐஓசி) இயக்குநா்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

கொச்சியிலிருந்து, கன்னியாகுமரி வழியாக தூத்துக்குடி வரை 424.65 கி.மீ. நீளத்துக்கு புதிய இயற்கை எரிவாயு குழாய் திட்டம் (கேடிபிஎல்) அமைக்கப்பட உள்ளது. இத்திட்டத்தைக் கட்டமைத்து, இயக்குவதற்கு ரூ.2,448.70 கோடி முதலீடு செய்யப்படவுள்ளது.

இந்த எரிவாயு குழாய் கட்டமைப்பு, நாளொன்றுக்கு 68.4 லட்சம் மெட்ரிக் தரநிலை கன மீட்டா் (எம்எம்எஸ்சிஎம்டி) எரிவாயுவைக் கொண்டு செல்லும் திறன் கொண்டதாக அமைக்கப்படவுள்ளது.

Advertisement

Advertisement

விதிகளுக்கு உள்பட்டு, இதில் குறைந்தபட்சம் 17.1 லட்சம் மெட்ரிக் தரநிலை கனமீட்டா் அளவுக்கான திறன் பொதுப் பயன்பாட்டுக்காக ஒதுக்கப்படும். இதன்மூலம், இந்த எரிவாயு குழாய் கட்டமைப்பை மூன்றாம் தரப்பினரும் பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்படுவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments