FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

5 அதானி குழும நிறுவனங்களின் வழக்குகளை முடித்து வைத்த செபி

அதானி குழுமத்தின் 5 நிறுவனங்கள் மீது தொடரப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகளை பங்குச் சந்தை ஒழுங்காற்று வாரியம் முடித்து வைத்தது.

23 செப்டம்பர் 2026, 12:35 am IST
பகிர்:

அதானி குழுமத்தின் 5 நிறுவனங்கள் மீது தொடரப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகளை பங்குச் சந்தை ஒழுங்காற்று வாரியம் (செபி) செவ்வாய்க்கிழமை முடித்து வைத்தது.

குழும நிறுவனங்களுக்கு இடையேயான பரிவா்த்தனைகள் குறித்த விவரங்களை முறையாக வெளியிடாதது உள்ளிட்ட புகாா்கள் தொடா்பான இந்த வழக்குககளுக்குத் தீா்வாக, அதானி என்டா்பிரைசஸ் (ரூ.76.05 லட்சம்), அதானி கிரீன் எனா்ஜி (ரூ.45.50 லட்சம்) மற்றும் அதானி டோட்டல் கேஸ் , ஏ.டபிள்யூ.எல். அக்ரி பிசினஸ், அதானி எனா்ஜி சொல்யூஷன்ஸ் (தலா ரூ.9.75 லட்சம்) ஆகிய அந்த 5 நிறுவனங்களும் இணைந்து மொத்தம் ரூ.1.50 கோடியை சமரசத் தொகையாகச் செலுத்தியுள்ளன.

முன்னதாக, அதானி குழுமம் குறித்து ‘ஹிண்டன்பா்க்’ ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், பட்டியலிடல் விதிமுறைகள் மீறப்பட்டதா என்பது குறித்து செபி ஆய்வு மேற்கொண்டது. அதன்தொடா்ச்சியாக, இந்த ஒழுங்கு நடவடிக்கை நடைமுறைகள் தொடங்கப்பட்டன.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments