சாம்சங் இந்தியா லாபம் 36% சரிவு; வருவாய் 1.2% உயர்வு!
சாம்சங் இந்தியா, மார்ச் 2026 உடன் முடிவடைந்த நிதியாண்டில் அதன் லாபம் 36% குறைந்து ரூ. 7,228.10 கோடியாக இருப்பதாக தெரிவித்தது.
புதுதில்லி: நுகர்வோர் மின்னணு சாதனத் துறையில் முன்னணியில் உள்ள சாம்சங் இந்தியா எலக்ட்ரானிக்ஸ், மார்ச் 2026 முடிவடைந்த நிதியாண்டில், அதன் லாபம் 36% குறைந்து ரூ. 7,228.10 கோடியாக இருப்பதாக தெரிவித்தது.
இருப்பினும், வணிகத் தகவல் தளமான 'டோஃப்லர்' மூலம் பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில், 2026 நிதியாண்டில் அதன் செயல்பாட்டு வருவாய் 1.2 சதவீதம் அதிகரித்து ரூ. 1.12 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக தெரிவித்தது.
சாம்சங் இந்தியா எலக்ட்ரானிக்ஸ், கடந்த நிதியாண்டில் (FY25) அதன் ஒருங்கிணைந்த வருவாய் ரூ. 1,11,183.40 கோடியாகவும், லாபம் ரூ. 11,287.50 கோடியாக பதிவு செய்தது. நிதியாண்டு 2026ல் அதன் இதர வருமானத்தையும் உள்ளடக்கிய நிறுவனத்தின் மொத்த ஒருங்கிணைந்த வருமானம் ரூ. 1,14,738.60 கோடியாக இருந்தது.
Advertisement
Advertisement
சாம்சங் இந்தியா எலக்ட்ரானிக்ஸ், அதன் மொத்த வருவாயில் பெரும்பகுதி மொபைல் போன் வணிகத்திலிருந்தே வந்துள்ளதாக தெரிவித்தது.
தென்கொரிய பெரும் நிறுவனமான சாம்சங் எலக்ட்ரானிக்ஸின் ஒரு அங்கமான இந்நிறுவனம், இந்திய சந்தையில் கைபேசிகள், டேப்லெட்டுகள், தொலைக்காட்சிகள், வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் கணினிகள் உள்ளிட்ட பல பிரிவுகளில் தனது வணிகத்தை மேற்கொண்டு வருகிறது.
வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் நுகர்வோர் மின்னணு சாதனத் துறையில் ரூ. 1 லட்சம் கோடிக்கும் அதிகமான பொருட்களை விற்பனை செய்த ஒரே நிறுவனம் இதுவாகும்.
Samsung India Electronics profit declined 36 per cent to Rs 7,228.10 crore for the financial year ended March 31, 2026.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.