FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
வணிகம்

தங்கம் விலை 4 நாள்களில் பவுனுக்கு ரூ.2,280 குறைவு

ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த 4 நாள்களில் பவுன் ரூ.2,280 குறைந்துள்ளது.

10 வினாடிகள் முன்பு
தங்கம்
பகிர்:

ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த 4 நாள்களில் பவுன் ரூ.2,280 குறைந்துள்ளது.

சென்னையில் தங்கத்தின் விலை வாரம் தொடக்கம் முதலே குறைந்த வண்ணம் உள்ளது. கடந்த செப்.21-இல் பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ.1,14,160-க்கும், செப்.22-இல் பவுனுக்கு ரூ.680 குறைந்து ரூ.1,13,480-க்கும், செப்.23-இல் பவுனுக்கு ரூ.400 குறைந்து ரூ.1,13,080-க்கும் விற்பனையானது.

இதையடுத்து, வியாழக்கிழமை விலை மீண்டும் குறைந்தது. அதன்படி, கிராமுக்கு ரூ.135 குறைந்து ரூ.14,000-க்கும், பவுனுக்கு ரூ.1,080 குறைந்து ரூ.1,12,000-க்கும் விற்பனையானது. இதன்மூலம் கடந்த 4 நாள்களில் விலை பவுனுக்கு ரூ.2,280 குறைந்துள்ளது.

Advertisement

Advertisement

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.250-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.2.50 லட்சத்துக்கும் விற்பனையானது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments