டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 19 காசுகள் உயர்ந்து ரூ. 95.80 ஆக நிறைவு!
இன்றைய அந்நியச் செலாவணி வர்த்தகத்தில், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 19 காசுகள் உயர்ந்து ரூ. 95.80 ஆக நிறைவடைந்தது.
மும்பை: உலகளாவிய முதலீட்டுச் சூழல் மேம்படும் நிலையில், ரிசர்வ் வங்கியின் தலையீடு ஆகியவற்றால், இன்றைய அந்நியச் செலாவணி சந்தையில், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 19 காசுகள் உயர்ந்து ரூ. 95.80 ஆக நிறைவடைந்தது.
உள்ளூர் இறக்குமதியாளர்களுக்கு டாலருக்கான தேவை அதிகரிப்பும், கச்சா எண்ணெய் விலையேற்றம் மற்றும் வட்டி விகிதங்களை உயர்த்தும் வகையில் ஃபெடரல் வங்கியின் குறிப்பு உள்ளிட்டவையால், ரூபாயின் மதிப்பை இது கட்டுப்படுத்தியதாக அந்நியச் செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ. 95.92 என்ற நிலையில் வர்த்தகத்தைத் தொடங்கியது. வர்த்தகத்தின் போது, ரூபாய் மதிப்பு ரூ. 95.94 என்ற குறைந்தபட்ச நிலைக்கு சரிந்தும், பிறகான வர்த்தகத்தில், மீண்டு ரூ. 95.80 ஆக நிறைவடைந்தது. இது அதன் முந்தைய வர்த்தக நாள் நிறைவு நிலையை விட 19 காசுகள் உயர்வாகும்.
Advertisement
Advertisement
நேற்று (வியாழக்கிழமை) டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 26 காசுகள் சரிந்து ரூ. 95.99 ஆக நிறைவடைந்தது.
The rupee appreciated 19 paise to close at 95.80 against the US dollar on Friday.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.