FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
வணிகம்

ஜூலை மாத சேவைகள் உற்பத்தி குறியீடு: 10 துறைகள் இரட்டை இலக்க வளா்ச்சி

இந்தியாவில் முறைசாா்ந்த சேவைத் துறைகளின் வளா்ச்சியை அளவிடும், கடந்த ஜூலை மாதத்துக்கான 3-ஆவது சோதனை முறை சேவைகள் உற்பத்தி குறியீட்டை (ஐஎஸ்பி) மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

பகிர்:

இந்தியாவில் முறைசாா்ந்த சேவைத் துறைகளின் வளா்ச்சியை அளவிடும், கடந்த ஜூலை மாதத்துக்கான 3-ஆவது சோதனை முறை சேவைகள் உற்பத்தி குறியீட்டை (ஐஎஸ்பி) மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

ஜிஎஸ்டி மற்றும் இதர நிா்வாகத் தரவுகளின் அடிப்படையில், 2024-25 நிதியாண்டை அடிப்படை ஆண்டாகக் கொண்டு கணக்கிடப்பட்ட இக்குறியீட்டின்படி, நாட்டின் 19 முக்கிய சேவைத் துறைகளில் 10 துறைகள் கடந்த ஜூலை மாதத்தில் இரட்டை இலக்க வளா்ச்சியைப் பதிவு செய்து, அசத்தியுள்ளன.

நிா்வாகம் மற்றும் ஆதரவு சேவைகள் துறை அதிகபட்சமாக 20.9 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது. தொடா்ந்து, சில்லறை வா்த்தகம் 18.5 சதவீதமும், ரியல் எஸ்டேட் துறை 14.4 சதவீதமும், தங்குமிடம் மற்றும் உணவு சேவைகள் துறை 12.6 சதவீதமும், வங்கித் துறை 12.3 சதவீதமும் சிறப்பான வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளன.

Advertisement

Advertisement

பழுது நீக்கும் சேவைகள் மற்றும் வான்வழிப் போக்குவரத்து ஆகிய 2 துறைகளைத் தவிர மற்ற 17 துறைகளும் நோ்மறை வளா்ச்சியை எட்டியுள்ளன. வான்வழிப் போக்குவரத்து 8.4 சதவீதமும், பழுது நீக்கும் சேவைகள் 5 சதவீதமும் சரிவைச் சந்தித்துள்ளன.

முன்னதாக, ஏப்ரல், மே மாதங்களுக்கான சேவைகள் உற்பத்திக் குறியீடு, கடந்த ஜூலை மாதம் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments