FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

அத்தியாயம்-17. கோடைக் காலத் தண்ணீர் பானை

நமது அத்தியாவசியத் தேவைகளில் மிகவும் முக்கிய இடம் பிடிப்பது தண்ணீர். நீரின்றி உயிர் வாழ முடியுமா

9 செப்டம்பர் 2025, 10:38 am
பகிர்:

நமது அத்தியாவசியத் தேவைகளில் மிகவும் முக்கிய இடம் பிடிப்பது தண்ணீர். நீரின்றி உயிர் வாழ முடியுமா (உடல் எடையில் 75 சதவிகிதம் தண்ணீர் மற்றும் திரவங்களால் ஆனவையே). இந்த அளவில் குறைபாடு ஏற்பட்டால் உடம்பு ஏற்றுக் கொள்ளாது.

முதலில் வாய்விட்டு தாகம் என்று கேட்கும் அதற்குப் பிறகு உடலில் பல உபாதைகள் தென்படும். அதற்குப் பிறகு உயிருக்கே ஆபத்து ஏற்படும். உடம்பில் உள்ள அணுக்களின் அமைப்பிற்கும் செயல்பாட்டிற்கும் தண்ணீர் ஒரு முக்கிய பங்கை வகிக்கின்றது. உடல் அதிர்வுகளால் உடலுறுப்புகளை காப்பாற்றும் பெரிய பொறுப்பு இந்த தண்ணீருக்கு உண்டு. உணவைச் சரிவர செரிக்கச் செய்வதற்கும் தண்ணீர் மிக அவசியம். உடலின் மிகப் பெரிய போக்குவரத்துக் கழகமே இந்த தண்ணீர் தான். ஊட்டச் சத்துக்களை உடம்பிற்கு சேர்க்கவும், கழிவுப் பொருட்களை உடம்பிலிருந்து வெளியேற்றவும் பயன்படுகிறது. உடம்பின் வெப்ப நிலையை சமமாக பாதுகாப்பதும் தண்ணீரின் முக்கிய வேலைப்பாடு. அதனால் தான் காய்ச்சல் ஏற்படும் காலத்தில் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது.

சிறுநீர், வியர்வை, சுவாசம், மலம் போன்றவற்றின் மூலம் ஏறத்தாழ 3 லிட்டர் தண்ணீர் உடம்பிலிருந்து வெளியேற்றப்படுகிறது. இந்த வெளியேற்றப்படுகின்ற நீரை ஈடுகட்டும் வகையில் தண்ணீரை உட்கொள்ள வேண்டும்.

Advertisement

Advertisement

உடலில் தண்ணீர் அளவு குறைந்தால் வரும் உபாதைகளைப் பற்றிப் பார்ப்போம். ‘தாகம்’ என்பது நம் உடலுக்குத் தண்ணீர் தேவை என்பதற்கான முதல் அறிகுறி. மூச்சு திணறல், சிறுநீர் கற்கள், மலச்சிக்கல் என்று பல பிரச்னைகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு.

வெயிலில் நடந்தால் தலைவலி ஏற்படுகிறதே என்று கூறுபவர்களுக்கு ஒரு முக்கிய தீர்வு, என்னவென்றால் கோடை காலத்தில் அதிகமாக தண்ணீர் உட்கொள்ள வேண்டும்.

இன்றைய காலகட்டத்தில் தண்ணீரை பிளாஸ்டிக் பாட்டிலில் ஊற்றி குடிக்காதவர்களை காண்பது அதிசயமான விஷயம் தான். இப்படி பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைத்துக் குடிப்பது உடம்புக்கு கேடு விளைவிக்கும். மேலும் அதை வெகு நேரம் அடைத்து வெயிலிலும் மழையிலும் காயவிட்டு குடிப்பதன் மூலம் புற்றுநோய் வருவதற்கு வாய்ப்புண்டு. பரவலான மக்கள் தொகை பெருக்கினால் ஏற்படும் தண்ணீர் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய நாம் எழுப்பும் போர் கிணறுகளால் ஏற்படும் மற்றொரு பிரச்னை சிறுநீர்க் கற்கள். இந்த போர் கிணறுகளிலிருந்து கிடைக்கும் தண்ணீர் சில நேரங்களில் உப்புக்களின் அளவு அதிகமாக இருக்கலாம். இவற்றையெல்லாம் பரிசோதித்து தான் உபயோகிக்க வேண்டுஜ்ம்.

காய்ச்சிய நீரையே குடிக்கவேண்டும். காலையில் எழுந்தவுடன் முதலில் உடலுக்குள் செலுத்த வேண்டியது காபியோ டீயோ அல்ல ஒரு டம்ளர் சுத்தமான தண்ணீர் தான். தண்ணீரை சிறிது சிறிதாக குடிக்க வேண்டும். நாள் முழுவதும் உட்கொள்ள வேண்டும். உணவு சாப்பிட்டு அரைமணி நேரத்துக்குப் பின்னரே தண்ணீர் குடிக்க வேண்டும்.

மலச்சிக்கல் உள்ளவர்கள் இரவில் தூங்கச் செல்வதற்கு முன் இரண்டு டம்பள் தண்ணீரை குடித்துவிட்டு செல்ல வேண்டும். மாணவர்களே உங்களுக்கு நாளை தேர்வா? காலையில் எழுந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா? இரண்டு டம்ளர் தண்ணீரைக் குடித்துவிட்டு செல்ல வேண்டும். மாணவர்களே உங்களுக்கு நாளை தேர்வா? காலையில் எழுதிருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா? இரண்டு டம்ளர் தண்ணீர், ஒரு வாழைப்பழம், அல்லது ஐந்து பேரீச்சம்பழத்தை சாப்பிட்டு படுங்கள். கடிகாரத்தின் அலார ஒலி தேவையே இருக்காது. தானாகவே முழிப்பு வந்துவிடும்.

வெயிலில் வேலை செய்பவர்களுக்கு மட்டுமல்ல குளுகுளுவென்று ஏஸி ரூம்களில் வேலை செய்பவர்களுக்குத் தான் உடலில் ஈரப்பதக் குறைவு ஏற்பட அதிக வாய்ப்பு உண்டு. வெப்பநிலைக் காரணமாக தாக உணர்வு இல்லாததால் தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற ஆர்வமே இருக்காது. இதனால் தான் ஐடி கம்பெனிகளில் வேலை செய்பவர்களுக்கு தலைவலி, சிறுநீர் கற்கள் ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது. வேலை பளு நேரத்திலும் கூட சிறிது சிறிதாக தண்ணீர் குடித்துக் கொண்டே இருக்கலாம்.

தண்ணீருக்கு பதிலாக மோர், பழச்சாறுகள், இளநீர், சூப் போன்றவற்றையும் உட்கொள்ளலாம். காபி, டீ, கோக், சாக்லெட், சிப்ஸ் ஆகியவை உடலில் உள்ள ஈரப்பதத்தை குறைத்து டீ ஹைட்ரேஷன் ஏற்படுத்தும்.

தொடர்புக்கு - அருணா ஷ்யாம் : 9884172289

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments