FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

சாம்பல புலுசு

மீனைக் கழுவி சுத்தப்படுத்திக் கொள்ளவும். வெங்காயத்தை விழுதாக அரைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாயை கீறி வைத்துக் கொள்ளவும். 

6 ஆகஸ்ட் 2025, 5:49 pm
பகிர்:

தேவையானவை

மீன் துண்டுகள் - 8
புளி - எலுமிச்சம் பழ அளவு
மிளகாய்த் தூள் - 4 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
வெங்காயம் - 4
பச்சைமிளகாய் - 5
இஞ்சிப் பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
எண்ணெய் - ஒன்னரை குழிக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கொத்துமல்லி இலை - சிறிது

பொடி செய்ய தேவையான பொருட்கள்

Advertisement

Advertisement

தனியா - 4 தேக்கரண்டி
ஜீரகம் - 2 தேக்கரண்டி
கிராம்பு - 4

செய்முறை

மீனைக் கழுவி சுத்தப்படுத்திக் கொள்ளவும். வெங்காயத்தை விழுதாக அரைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாயை கீறி வைத்துக் கொள்ளவும்.  பொடி செய்ய கொடுத்துள்ள பொருட்களை மிக்சியில் பொடியாக்கிக்கொள்ளவும். புளியை ஊறவைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் அரைத்து வைத்துள்ள வெங்காய விழுதையும், பச்சை மிளகாயையும் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியதும் அதில் இஞ்சிப் பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பிறகு மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். அவை வதக்கியதும், அதில் புளியை கரைத்து ஊற்றவும்.

குழம்பு நன்கு கொதிக்கும் வரை மூடி வைக்கவும். குழம்பு நன்கு கொதித்தவுடன்
அதில் மீன் துண்டுகளையும் பொடி செய்து வைத்துள்ள மசாலாவையும் போட்டு மீண்டும் மூடவும். குழம்பு நன்கு கொதித்ததும் கொத்துமல்லி தூவி பரிமாறவும். சுவையான சாப்பல புலுசு ரெடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments