FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பகுதி - 170

திருப்போரூரில் சூரனோடு பொருது, சூரசம்ஹாரத்துக்குப் பிறகு சினம் தணிந்து அமர்ந்த மலை என்பதால் திருத்-தணிகை என்று வழங்கப்படும் தலத்துக்கான பாடல் இது. 

6 ஆகஸ்ட் 2025, 5:40 pm IST
பகிர்:


திருப்போரூரில் சூரனோடு பொருது, சூரசம்ஹாரத்துக்குப் பிறகு சினம் தணிந்து அமர்ந்த மலை என்பதால் திருத்-தணிகை என்று வழங்கப்படும் தலத்துக்கான பாடல் இது.  முற்றிலும் வல்லொற்றுகளாலும் குறில் இணையால் அமைந்த நிரையசையாலும் நடக்கும் இந்தப் பாடலில், ஒவ்வோர் அடியிலும் ஈற்றுச்சீரில் மூன்றாவது எழுத்து நெடிலாகவும், கடைசி எழுத்து (மடக்கி இருக்கும் அடிகள் நீங்கலாக — எளிதாகச் சொல்ல வேண்டுமானால் — ஒன்றுவிட்டு ஒன்று பயிலும் அடிகளில்) மெல்லொற்றாகவும், மடக்கடிகளில் மூன்று நான்கு ஆகிய இரண்டெழுத்துகளும் (கடைசிச் சீரில் மட்டும்) நெடிலாகப் பயிலும் நேர்த்தியைப் பார்க்கலாம்.

தனத்தனத் தனத்தனத் தனத்தனத் தனத்தனத்

தனத்தனத் தனத்தனத் - தனதான

Advertisement

Advertisement


கனத்தறப் பணைத்தபொற் கழைப்புயத் தனக்கிரிக்

              கனத்தையொத் துமொய்த்தமைக் - குழலார்தங்

        கறுத்தமைக் கயற்கணிற் கருத்துவைத் தொருத்தநிற்

              கழற்பதத் தடுத்திடற் - கறியாதே

இனப்பிணிக் கணத்தினுக் கிருப்பெனத் துருத்தியொத்

              திசைத்தசைத் தசுக்கிலத் - தசைதோலால்

        எடுத்தபொய்க் கடத்தினைப் பொறுக்குமிப் பிறப்பறுத்

             தெனக்குநித் தமுத்தியைத் - தரவேணும்

பனைக்கரச் சினத்திபத் தனைத்துரத் தரக்கனைப்

              பயத்தினிற் பயப்படப் - பொரும்வேலா

        பருப்பதச் செருக்கறத் துகைக்குமுட் பதத்தினைப்

              படைத்தகுக் குடக்கொடிக் - குமரேசா

தினைப்புனப் பருப்பதத் தினிற்குடிக் குறத்தியைச்

              செருக்குறத் திருப்புயத் - தணைவோனே

        திருப்புரப் புறத்தியற் றிருத்தகுத் துநித்திலத்

              திருத்திசைத் திருத்தணிப் - பெருமாளே.

</p><p align="JUSTIFY"><iframe height="200" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/249443134&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /></p><p> </p>

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments