FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்த நாளில்...

இந்த நாளில் அன்று - (08.09.1982) - காஷ்மீர் முதல்வர் ஷேக் அப்துல்லா காலமானார் - மகன் பரூக் புது முதல்வராகப் பதவி ஏற்றார்

காஷ்மீர் முதலமைச்சர் ஷேக் அப்துல்லா காலமானார். இதனையடுத்து அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்ட பதவி ஏற்பு நிகழ்ச்சியில் அவரது மகன் டாக்டர் பரூக் அப்துல்லா, காஷ்மீரின் புதிய முதலைச்சராகப் பதவி ஏற்றார்.

Updated On : 4 செப்டம்பர் 2015, 5:29 pm IST
பகிர்:

காஷ்மீர் முதலமைச்சர் ஷேக் அப்துல்லா காலமானார். இதனையடுத்து அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்ட பதவி ஏற்பு நிகழ்ச்சியில் அவரது மகன் டாக்டர் பரூக் அப்துல்லா, காஷ்மீரின் புதிய முதலைச்சராகப் பதவி ஏற்றார்.

ஷேக் அப்துல்லாவின் மரணத்துக்கு, காஷ்மீர் மாநிலத்தில் 11 நாட்கள் துக்கம் அனுஷ்டிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீரில் எல்லா அரசு அலுவலகங்களும் கல்வி நிறுவனங்களும் 3 நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

கடந்த வாரம் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதில் இருந்து அவர் உடல்நிலை குன்றி மருத்துவச் சிகிச்சையில் இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

காஷ்மீர் சிங்கம் என்று அழைக்கப்படும் ஷேக் அப்துல்லாவுக்கு 77 வயதாகிறது. அவருக்கு மனைவியும் 3 மகன்களும் 2 புதல்விகளும் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments