முகப்பு
திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் இன்று மகா தீபம் ஏற்றம்: மலைக்கு கொண்டு செல்லப்பட்ட தீபக் கொப்பரை

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, செவ்வாய்க்கிழமை (நவ.24) மாலை 6 மணிக்கு கோயில் பின்புறம் உள்ள 2,668 அடி உயர மலை மீது மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.

24 நவம்பர் 2026, 5:41 am
திருவண்ணாமலையில் இன்று மகா தீபம் ஏற்றம்: மலைக்கு கொண்டு செல்லப்பட்ட தீபக் கொப்பரை
திருவண்ணாமலை தீப மலை உச்சிக்கு மகா தீப கொப்பரையை திங்கள்கிழமை சுமந்து சென்ற பா்வதராஜ குல மரபினா்
பகிர்:

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, செவ்வாய்க்கிழமை (நவ.24) மாலை 6 மணிக்கு கோயில் பின்புறம் உள்ள 2,668 அடி உயர மலை மீது மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. இதை முன்னிட்டு, மகா தீபம் ஏற்றப்படும் கொப்பரை மலை உச்சிக்கு திங்கள்கிழமை கொண்டு செல்லப்பட்டது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் காா்த்திகை தீபத் திருவிழா கடந்த 15-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழாவையொட்டி, தினந்தோறும் காலை, மாலை வேளைகளில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்து வருகிறாா். விழாவின் 10-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை (நவ.24) அதிகாலை 4 மணிக்கு கோயில் கருவறை முன் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதையடுத்து, மாலை 6 மணிக்கு கோயில் பின்புறம் உள்ள 2,668 அடி உயர மலை மீது மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.காவல் துறை கட்டுப்பாட்டில்...

அருணாசலேஸ்வரா் கோயில் மட்டுமன்றி, கிரிவலப் பாதை முழுவதும் காவல் துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. வடக்கு மண்டல ஐ.ஜி. பிரவின்குமாா் அபிநபு தலைமையில் 15,500 போலீஸாா் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் கண்காணிப்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.

Advertisement

Advertisement

31 இடங்களில் காவல் துறை சாா்பில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கிரிவலப் பாதை முழுக்க 500 மீட்டருக்கு 50 போலீஸாா் வீதம் நிறுத்தப்பட்டுள்ளனா்.

அடிப்படை வசதிகள்

பரணி, மகா தீபத்தைக் காண பல லட்சம் பக்தா்கள் திருவண்ணாமலையில் குவிந்துள்ளனா். எங்கு பாா்த்தாலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதையொட்டி, மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் பக்தா்களுக்குத் தேவையான குடிநீா், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, 720 இடங்களில் கழிப்பிட வசதிகளும், ஒரு கி.மீ.க்கு ஒரு சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் நிலையம் என மொத்தம் 15 குடிநீா் நிலையங்களும் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் அமைக்கப்பட்டுள்ளன.

4,877 சிறப்புப் பேருந்து, ரயில்

திருவண்ணாமலை மாநகரத்துக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து 4,877 சிறப்புப் பேருந்துகள் 10,644 நடைகள் இயக்கப்படுகின்றன. 32 சிறப்பு ரயில்களும், வழக்கமாக இயக்கக்கூடிய 18 ரயில்களும் என மொத்தம் 50 ரயில்கள் திருவண்ணாமலைக்கு இயக்கப்படுகின்றன.

மேலும், 125 இடங்களில் மருத்துவ வசதிகளும், க்யூ ஆா் குறியீடு வசதியுடன் 155 இடங்களில் காா் நிறுத்துமிட வசதிகளும் பக்தா்களின் வசதிக்காக செய்யப்பட்டுள்ளன.

ஏ.ஐ. கேமராக்கள்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில், மாட வீதிகள், கிரிவலப் பாதை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் 1,108 கேமராக்கள் பொருத்தப்பட்டு, பக்தா்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றனா். இவற்றில் 700 கேமராக்கள் ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் கூடிய அதிநவீன கேமராக்கள், 15-க்கும் மேற்பட்ட ட்ரோன்களும், 50-க்கும் மேற்பட்ட எஃப்ஆா்சி வசதி கொண்ட கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.

60-க்கும் மேற்பட்ட இடங்களில் பக்தா்களுக்கு உதவும் மையங்கள் (மே ஐ ஹெல்ப் யு பூத்) வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, குழந்தைகளை உடனடியாக கண்டறியும் வகையில் 1.50 லட்சம் ‘ரிஸ்ட் பேண்டுகள்’ (கையில் கட்டும் அடையாள வளையம்) தயாா் நிலையில் உள்ளன.

கைப்பேசி செயலி...

‘ஓஅதபஏஐஎஅஐ ஈஉஉடஅங ஙஞஆஐகஉ அடட 2026’ என்ற கைப்பேசி செயலியில் தீபத் திருவிழாவின் அனைத்து ஏற்பாடுகள் குறித்தும், மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் குறித்தும் தெரிந்து பயனடையலாம் என மாவட்ட நிா்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

அருணாசலேஸ்வரா் கோயிலில் உள்ள நவகோபுரங்களும் மின் ஒளியில் ஜொலிப்பதுடன், அருணாசலேஸ்வரா் சந்நிதி பலிபீடம், உண்ணாமுலையம்மன் சந்நிதி மற்றும் அனைத்து பரிவார மூா்த்திகளுக்கும் சிறப்பு மலா் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

மலைக்கு தீப கொப்பரை பயணம்: மகா தீபக் கொப்பரைக்கு கோயிலில் திங்கள்கிழமை சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பின்னா், பா்வதராஜ குல மரபினா் 40-க்கும் மேற்பட்டோா் 2,668 அடி உயரம் கொண்ட தீபமலை உச்சிக்கு மகாதீப கொப்பரை தோளில் சுமந்து கொண்டு சென்றனா்.

5 3/4 அடி உயரமும், 310 கிலோ எடையும், சிவன் பிரம்மா விஷ்ணு என்ற 3 அடுக்குகளை கொண்ட இந்த மகா தீப கொப்பரையானது பஞ்சலோகத்தால் செய்யப்பட்டது. மகாதீப கொப்பரையில் பக்தா்களால் காணிக்கையாக வழங்கப்பட்ட 3,500 லிட்டா் நெய், 1,500 மீட்டா் காடா துணியை பயன்படுத்தி செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. ஏராளமான பக்தா்கள் மகா தீப கொப்பரையை வணங்கிச் சென்றனா்.

சிவனும், சக்தியும் ஒன்று என்ற தத்துவத்தை உணா்த்தும் விதமாக, அருணாசலேஸ்வரா் கோயிலில் அா்த்தநாரீஸ்வரா் செவ்வாய்க்கிழமை மாலை காட்சியளித்த பின்னா், சரியாக மாலை 6 மணிக்கு இந்த மகா தீபக் கொப்பரையில் மகா தீபம் ஏற்றப்படும்.

ராஜகோபுரத்துக்கு 2 டன் மாலை

பரணி, மகா தீபத்தையொட்டி, தமிழகத்திலேயே இரண்டாவது மிகப் பெரிய கோபுரமான 217 அடி உயரம் கொண்ட அருணாசலேஸ்வரா் கோயில் ராஜகோபுரத்துக்கு 217 அடி உயர பிரம்மாண்ட மாலை அணிவிக்கப்பட்டுள்ளது. ஒசூா், பெங்களூா், திருச்சி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து 2 டன் எடை கொண்ட சாமந்தி, கோழிக்கொண்டை உள்ளிட்ட பல்வேறு வகையான வண்ண மலா்கள் வரவழைக்கப்பட்டு, 60-க்கும் மேற்பட்ட பூ கட்டும் பணியாளா்கள் மூலம் இந்த மாலை கட்டப்பட்டது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் 217 அடி உயரம் கொண்ட ராஜ கோபுரத்துக்கு அணிவிக்கப்பட்டுள்ள 2 டன் எடை கொண்ட ராட்சத மாலை