இந்த நாளில் அன்று - (27.09.2001) - அமைச்சர்களின் அவதூறுப் பிரசாரங்களுக்கு 'ஆமாம்' போடுவது முதல்வருக்கு நியாயமல்ல - மு.கருணாநிதி
வேண்டுமென்றே திட்டமிட்டுக் கூறப்படும் அவதூறுப் பிரசாரங்களுக்கு அமைச்சர்களை வழிநடத்தக்கூடிய தலைமைப் பொறுப்பிலே இருக்கக்கூடிய முதலமைச்சர் பன்னீர்செல்வம் 'ஆமாம்' போடுவது நியாயமல்ல என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
வேண்டுமென்றே திட்டமிட்டுக் கூறப்படும் அவதூறுப் பிரசாரங்களுக்கு அமைச்சர்களை வழிநடத்தக்கூடிய தலைமைப் பொறுப்பிலே இருக்கக்கூடிய முதலமைச்சர் பன்னீர்செல்வம் 'ஆமாம்' போடுவது நியாயமல்ல என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை -
அதிமுக அமைச்சர்கள் முன்னிலையில் பிரதமர் உள்ளிட்ட சிலரது உருவபொம்மைகளை கொளுத்திய நிகழ்ச்சி படங்களுடன் பல பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது.
Advertisement
Advertisement
உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்குக் காரணம் வாஜபேயியின் சதிதான் என்று பேரவைத் தலைவரே பேட்டியளித்துள்ளார்.
உச்ச நீதிமன்றத்தில் அரசியல் சட்டம் வளைக்கப்பட்டுவிட்டது என்று உருவப்பொம்மை எரிப்பு நிகழ்ச்சியில் உரையாற்றினார்; சதிகாரர் சொல்படி சட்டம் நடந்தது என்ற நீதிமன்ற அவமதிப்பும் செய்தார். இத்தீர்ப்புக் பின்னணியில் வாஜபேயியும் அருண் ஜெட்லியும் இருக்கிறார்கள் என்று அமைச்சர் தம்பிதுரை ஒரு பேட்டியில் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
அமைச்சர்கள் முன்னிலையில் அவர்களது ஆசியுடன், அவர்கள் கண் எதிரிலேயே உருவபொம்மைகள் கொளுத்தப்பட்டதும், செருப்புகளால் அடிக்கப்பட்டதும் முதலமைச்சரால் மறுக்கப்படுகிறதென்றால், அதற்கு ஒரே ஒரு காரணம்தான் இருக்க முடியும்.
நடந்த அநாகரிகச் செயல்கள் அமைச்சர்கள் முன்னின்று நடத்தப்படக்கூடாதவை என்பதை முதல்வர் பன்னீர்செல்வம் உணர்ந்திருக்கிறார். அதனால்தான் இதில் அமைச்சர்களுக்குத் தொடர்பில்லை எனக்கூறிவிட்டு, உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே, ஜெயலலிதாவை பதவியிலிருந்து நீக்க வேண்டும் எனக் கருணாநிதிதான் வலியுறுத்தினார் என்று குறிப்பிட்டுள்ளார் அவர்.
இவ்வாறு கூறியன் மூலம்தான் அம்மா வழி நடப்பதை உறுதிப்படுத்தியுள்ளார் அவர். முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு ஒன்றைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
தங்களைப் பாதிக்கக்கூடிய காரியங்கள் சட்டப்படியாகவோ, நீதி நியாயப்படியோ நடந்தாலும் அதற்கு கருணாநிதிதான் காரணம் என்று என்னைச் சுட்டிக் காட்டித் தங்களுக்கு அரசியல் ஆதாயம் தேடிக்கொள்ள முற்படாவிட்டால் அதிமுகவினருக்குத் தூக்கமே வராது.
அதிமுகவினரின் இத்தைய பொறுப்பற்ற பேச்சுகளுடன் ஒரு முதலமைச்சரின் பேட்டியும் சங்கமித்துவிடக்கூடாது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.