✕
முகப்பு
சுவடுகள்-2014

உலகம்: மே-ஆகஸ்ட்

மே 19\05: தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில், பள்ளிப் பேருந்து தீப்பிடித்து வெடித்ததில், 32 குழந்தைகள் உயிரிழந்தனர்.

Updated On : 31 டிசம்பர் 2014, 6:09 pm
பகிர்:

மே
19\05: தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில், பள்ளிப் பேருந்து தீப்பிடித்து வெடித்ததில், 32 குழந்தைகள் உயிரிழந்தனர்.

20\05: நைஜீரியாவில் ஒரே நாளில் போகோ ஹராம் பயங்கரவாதிகள் முன்று கிராமங்களில் நிகழ்த்திய தாக்குதல்களில் 260-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

30\05: அமெரிக்காவில் நடைபெற்ற "ஸ்பெல்லிங் பீ' போட்டியில் ஸ்ரீராம் ஜே ஹத்வார், அன்சுன் சுஜோ ஆகிய இரு அமெரிக்க வாழ் இந்தியச் சிறுவர்கள் முதல் பரிசு வென்றனர்.

Advertisement

Advertisement

ஜூன்

7\06: உக்ரைனின் ஐந்தாவது அதிபராக பெட்ரோ பொரொஷென்கோ பதவியேற்றார்.

8\06: எகிப்து அதிபர் தேர்தலில் முன்னாள் ராணுவத் தலைமைத் தளபதி அப்துல் ஃபட்டா அல்-சிசி 97 சதவீத வாக்குகளுடன் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அதிபராகப் பதவியேற்றார்.

15\06 : கராச்சி விமான நிலையத்தில் தலிபான் பயங்கரவாதிகள் தாக்குதல் நிகழ்த்தி 29 பேரைக் கொன்றதற்குப் பதிலடியாக, தெற்கு வஜிரிஸ்தான் மாகாணத்தில் பாகிஸ்தான் போர் விமானங்கள் நிகழ்த்திய தாக்குதலில் 150 தலிபான்கள் கொல்லப்பட்டனர்.

21\06: இராக் - சிரியா எல்லைப் பகுதி ராணுவ நிலை ஒன்றை இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகள் கைப்பற்றினர்.

29\06: இராக்கிலும், சிரியாவிலும் கணிசமான பகுதியைக் கைப்பற்றியிருந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள், அங்கு "இஸ்லாமிய மத' அரசை நிறுவியுள்ளதாக அறிவித்தனர்.

ஜூலை

1\07: இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு தற்காப்புக்காக மட்டுமே பயன்படுத்தும் வகையில் இருந்த ஜப்பான் ராணுவத்தை, படையெடுப்பு போன்ற நடவடிக்கைகளிலும் ஈடுபடுத்தும் வகையில், அந்நாட்டின் அரசியல் சாசனம் மாற்றம் செய்யப்பட்டது.

8\07: காஸா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதலைத் தொடங்கியது. காஸôவில் உள்ள ஹமாஸ் பயங்கரவாதிகளைக் குறிவைத்து நடத்திய தொடர் தாக்குதல் சம்பவங்களில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். ஆகஸ்ட் 26-ஆம் தேதி இந்தப் போர் முடிவுக்கு வந்தது.

17\07: நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமிலிருந்து கோலாலம்பூர் சென்ற மலேசிய ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் கிழக்கு உக்ரைன் பகுதியில் நொறுங்கி விழுந்தது. இதில் 280 பேர் உயிரிழந்தனர். ரஷ்ய ஆதரவு கிளர்ச்சிப் படையினரால் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக உக்ரைன் அரசு குற்றம்சாட்டியது.

18\07: மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கினா ஃபாúஸôவிலிருந்து புறப்பட்ட ஜெட் விமானம் மோசமான வானிலை காரணமாக விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 116 பேர் உயிரிழந்தனர்.

ஆகஸ்ட்

2\08: நேபாளத்தின் சிந்துபால்சௌக் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 152 பேர் உயிரிழந்தனர்.

3\08: தென்மேற்கு சீனப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 367 பேர் உயிரிழந்தனர். இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.


8\08: இராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த பகுதிகள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதலைத் தொடங்கியது.

8\08: எபோலா வைரஸ் தாக்காமல் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து நாடுகளையும் உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments