செப்டம்பர் முதல் டிசம்பர் வரை
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா.....
செப்டம்பர்
5/9 அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா, பிரேசிலின் புருனோ சோரஸ் ஜோடி பட்டம் வென்றது.
7/9 அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிருக்கான ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் ஆறாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.`
Advertisement
Advertisement
7/9 இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்தியா வென்றது.
13/9 அகில இந்திய டென்னிஸ் சங்கத்தின் துணைத் தலைவர் பொறுப்பில் இருந்து கார்த்தி சிதம்பரம் நீக்கம்.
13/9 தென் கொரியாவின் இன்சியானில் நடைபெற்ற, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், துப்பாக்கி சுடுதல் 50 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் ஜிது ராய் தங்கம் வென்றார்.
14/9 ஆசிய விளையாட்டுப் போட்டி, பாட்மிண்டன் பிரிவில் தமிழக வீராங்கனை தீபிகா பல்லிகல் வெண்கலம் வென்றார்.
28/9 ஆசிய விளையாட்டுப் போட்டியில், ஆடவருக்கான 65 கிலோ எடைப் பிரிவு மல்யுத்தப் பிரிவில் யோகேஷ்வர் தத் தங்கம் வென்றார்.
29/9 ஆசிய விளையாட்டு, மகளிருக்கான வட்டு எறிதலில் சீமா பூனியா தங்கம் வென்றார்.
29/9 டென்னிஸ் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா, சாகேத் மைனேனி ஜோடி தங்கம் வென்றது.
30/9 மகளிருக்கான குத்துச்சண்டை போட்டியின் அரையிறுதியில் நடுவரின் தவறான தீர்ப்பினால், இந்திய வீராங்கனை சரிதா தேவி தோல்வியடைந்தார். இதுபெரும் சர்ச்சையைக் கிளப்பியது.
அக்டோபர்
2/10 ஆசிய விளையாட்டுப் போட்டி: ஹாக்கி பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. இதன்மூலம், 2016 ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு இந்தியா நேரடித் தகுதி பெற்றது.
3/10 ஆசிய விளையாட்டுப் போட்டி: நடுவரின் தவறான தீர்ப்பினால் பாதிக்கப்பட்ட இந்திய குத்துச்சண்டை வீராங்கனை சரிதா தேவி, பதக்கத்தை ஏற்க மறுத்தார். இது சர்ச்சையைக் கிளப்பியதை அடுத்து, தன் செயலுக்கு அவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்.
4/10 சாம்பியன்ஸ் லீக் டி-20 இறுதி ஆட்டத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ்.
18/10 இந்திய ஹாக்கி அணியின் பயிற்சியாளார் பொறுப்பில் இருந்து டெர்ரி வால்ஷ் விலகினார்.
21/10 இந்திய சுற்றுப் பயணத்தை மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியம் ரத்து செய்ததை அடுத்து, எதிர்காலத்தில் அந்த அணியுடன் நேரடிப் போட்டிகளில் இந்தியா பங்கேற்காது என பிசிசிஐ தெரிவித்தது.
29/10 உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், இந்தியாவின் பங்கஜ் அத்வானி பட்டம் வென்றார்.
நவம்பர்
1/11 சுற்றுப் பயணத்தை பாதியிலேயே ரத்து செய்த, மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியத்திடம், பிசிசிஐ ரூ. 250 கோடி இழப்பீடு கோரியது.
3/11 "2007 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு முன், டிராவிட்டுக்கு பதிலாக கேப்டன் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு, அப்போதைய பயிற்சியாளர் கிரேக் சேப்பல் என்னிடம் வற்புறுத்தினார்' என்று, சச்சின் தனது சுயசரிதையில் தெரிவித்திருந்தார். இது போன்ற பல்வேறு சர்ச்சைத் தகவல்கள் அந்தப் புத்தகத்தில் இடம்பெற்றிருந்தன.
13/11 கொல்கத்தாவில் நடைபெற்ற, இலங்கை அணியுடனான ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில், இந்திய வீரர் ரோஹித் சர்மா 173 பந்துகளில் 264 ரன்கள் குவித்து புதிய உலக சாதனை படைத்தார்.
14/11 ஐபிஎல் சூதாட்டப் புகார் குறித்து விசாரித்த நீதிபதி முத்கல் குழு அறிக்கையில், ஐசிசி தலைவர் சீனிவாசன், அவரது மருமகன் குருநாத் மெய்யப்பன், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சக உரிமையாளரான ராஜ் குந்த்ரா, கிரிக்கெட் நிர்வாகி சுந்தரராமன் ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றிருப்பதாக உச்ச நீதிமன்றம் அறிவித்தது.
16/11 சீன ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியின் மகளிர் பிரிவில், இந்தியாவின் சாய்னா நெவாலும், ஆடவர் பிரிவில், ஸ்ரீகாந்தும் சாம்பியன் பட்டம் வென்றனர்.
17/11 ஐபிஎல் சூதாட்ட விவகாரத்தில், விதிமுறைகளை மீறிய வீரர்கள் மீது சீனிவாசன் நடவடிக்கை எடுக்கத் தவறியதாக, நீதிபதி முத்கல் குழு விசாரணை அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.
23/11 ரஷியாவின் சோச்சியில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியஷிப் போட்டியில், உலக சாம்பியனான நார்வேயின் மேக்னஸ் கார்ல்ùஸன், இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைத் தக்க வைத்தார்.
26/11 தேர்வுக் குழு நிராகரித்த போதிலும், நீதிமன்றத்தின் மூலமாக போராடி அர்ஜுனா விருதை வென்றார் குத்துச்சண்டை வீரர் மனோஜ் குமார்.
30/11 மக்காவ் ஓபன் கிராண்ட் ஃப்ரீ கோல்ட் பாட்மிண்டன் போட்டியில், இந்தியாவின் பி.வி.சிந்து பட்டம் வென்றார்.
டிசம்பர்
14/12: லண்டனில் நடைபெற்ற "லண்டன் செஸ் கிளாசிக்' தொடரில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் பட்டம் வென்றார்.
17/12: ஆசிய விளையாட்டுப் போட்டிகளின்போது, நடுவரின் தீர்ப்பில் அதிருப்தி அடைந்து, பரிசளிப்பு விழாவில் பதக்கத்தை ஏற்க மறுத்த இந்திய குத்துச் சண்டை வீராங்கனை சரிதா தேவிக்கு, சர்வதேச குத்துச்சண்டை கூட்டமைப்பு ஓராண்டு தடை விதித்தது.
20/12: முதல் முறையாக நடைபெற்ற இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்துப் போட்டியில் கொல்கத்தா அணி கோப்பையை வென்றது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.