✕
முகப்பு
சுவடுகள்-2014

கௌரவிக்கப்பட்டோர்

முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவுக்கு பிசிசிஐ சார்பில் சி.கே.நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருதும்,

Updated On : 31 டிசம்பர் 2014, 7:26 pm
பகிர்:

ஜனவரி

11/1. முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவுக்கு பிசிசிஐ சார்பில் சி.கே.நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருதும், சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரனுக்கு பாலி உம்ரிகர் விருதும் வழங்கப்பட்டது.

25/1: நடிகர் கமலஹாசன், கடம் வித்வான் விநாயக்ராம், கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட 9 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன.

Advertisement

Advertisement

பிப்ரவரி

4/2. விஞ்ஞானி சி.என்.ஆர்.ராவ், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆகியோருக்கு "பாரத ரத்னா' விருது வழங்கப்பட்டது.

14/2. கர்நாடக இசைமேதை எம்.பாலமுரளி கிருஷ்ணாவுக்கு ஸ்ரீதியாகப் பிரம்ம கான சபா சார்பில் "தியாகப் பிரம்ம நாத விபூஷண்' விருது வழங்கப்பட்டது.

ஜூலை

15/7. சுற்றுச்சூழல் ஆர்வலர் சண்டி பிரசாத் பட்டுக்கு 2013ஆம் ஆண்டுக்கான காந்தி அமைதி விருதை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கினார்.

20/7. கர்நாடக இசைமேதை டி.வி.கோபாலகிருஷ்ணனுக்கு 2014ஆம் ஆண்டுக்கான சங்கீத கலாநிதி விருது, சென்னை மியூசிக் அகாதெமி சார்பில் வழங்கப்பட்டது.

ஆகஸ்ட்

2/8. நடிகர் கமமஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை தமிழ் வர்த்தக சபை வழங்கியது.

13/8. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மஞ்சுள் பர்காவுக்கு ஃபீல்ட்ஸ் பதக்கம் வழங்கப்பட்டது. இந்த விருது, கணிதத்துக்கு வழங்கப்படும் நோபல் பரிசாகப் புகழப்படுகிறது. அவரைப் போல இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மற்றொருவரான சுபாஷ் கோட்டுக்கு ரோல்ஃப் நேவன்லின்னா விருது வழங்கப்பட்டது.

14/8. மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு அசோக சக்ரா விருது வழங்கப்பட்டது.

23. தமிழகத்தைச் சேர்ந்த இரா.நடராஜனுக்கு பால புரஸ்கார் விருதும், அபிலாஷுக்கு யுவ புரஸ்கார் விருதும் வழங்கப்பட்டன.

6/8. அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் ஓ'கீஃபே-வுக்கும், நார்வே நாட்டைச்சேர்ந்த மே-பிரிட், எட்வர்ட் மோசர் ஆகியோருக்கும் மருத்துவத் துறையில் 2014ஆம் ஆண்டுக்கான நோபல் விருது அறிவிக்கப்பட்டது.

6/8. இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு ஐசாமு அகாசகி, ஹிரோஸி அமனோ, சுஜி நகமுரா ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டது.

8/8. வேதியியல் துறைக்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த எரிக் பெட்ஷிக், வில்லியம் மோர்னர், ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த ஸ்டீஃபன் ஹெல் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டது.

13/8. பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த ஜீன் திரோலுக்கு அறிவிக்கப்பட்டது.

நவம்பர்

3/11. ஜப்பானின் உயரிய விருதுக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தேர்வு செய்யப்பட்டார்.

26/11. குத்துச்சண்டை வீரர் மனோஜ்குமாருக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டது.

டிசம்பர்

11/12: இந்தியாவைச் சேர்ந்த கைலாஷ் சத்யார்த்தி, பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா யூசஃப்சாய் ஆகியோருக்கு நிகழாண்டின் அமைதிக்கான நோபல் பரிசு நார்வே தலைநகர் ஆஸ்லோவில் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments