மே-ஆகஸ்ட் வரை
இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ஐ.என்.எஸ். கொல்கத்தா போர்க் கப்பலை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார்
மே
2/5: அஸ்ஸாம் மாநிலம் கோக்ரஜார், பாஸ்கா ஆகிய மாவட்டங்களில் போடா தீவிரவாதிகள் நிகழ்த்திய தாக்குதல்களில் வங்கமொழிப் பேசும் முஸ்லிம்கள் 32 பேர் கொல்லப்பட்டனர்.
4/5: மும்பை அருகே பயணிகள் ரயில் தடம் புரண்டு ஏற்பட்ட விபத்தில் 25 பேர் பலியாகினர். 145 பேர் காயமடைந்தனர்.
Advertisement
Advertisement
7/5: ஜல்லிக்கட்டில் காளைகள் பயன்படுத்தப்படுவதற்குத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
11/5: சத்தீஸ்கர் மாநிலம், காத்ரிசோலியில் மாவோயிஸ்டுகள் நிகழ்த்திய கண்ணிவெடித் தாக்குதலில், 7 அதிரடிப்படை போலீஸôர் உயிரிழந்தனர்.
13/5: இந்திய ராணுவத் தலைமைத் தளபதியாக லெப்டினென்ட் ஜெனரல் தல்பீர் சிங் சுஹாகை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நியமித்தது.
20/5: பிகாரின் 23ஆவது முதல்வராக, தலித் வகுப்பினரான ஜிதன் ராம் மாஞ்சி பதவியேற்றார்.
21/5: ஒடிஸா சட்டப்பேரவைத் தேர்தலில் பிஜு ஜனதா தளம் வெற்றி பெற்றதையடுத்து, அந்த மாநிலத்தின் முதல்வராக 4ஆவது முறையாக அக்கட்சியின் தலைவர் நவீன் பட்நாயக் பதவியேற்றார்.
22/5: குஜராத்தின் முதல்வராக ஆனந்திபென் படேல் பதவியேற்றார். இவர், அந்த மாநிலத்தின் முதல் பெண் முதல்வராவார்.
26/5: உத்தரப் பிரதேச மாநிலம், கோரக்பூர் அருகே கோரக்நாத் விரைவு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில், 20 பேர் உயிரிழந்தனர். 100 பேர் காயமடைந்தனர்.
26/5: மக்களவைத் தேர்தலில் பாஜக பெரும் வெற்றி பெற்றதையடுத்து, பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார். இந்த நிகழ்ச்சியில், பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட சார்க் நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
ஜூன்
2/6: இந்தியாவின் 29ஆவது மாநிலமாக உருவாக்கப்பட்ட தெலங்கானாவின் முதல்வராக தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சித் தலைவர் சந்திரசேகர ராவ் பதவியேற்றார்.
6/6: 16ஆவது மக்களவையின் தலைவராக சுமித்ரா மகாஜன் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார்.
8/6: மும்பையில் மெட்ரோ ரயில் சேவையை அந்த மாநில முதல்வர் பிருத்விராஜ் சவாண் தொடக்கி வைத்தார்.
8/6: ஆந்திர முதல்வராக தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு பதவியேற்றார்.
18/6: இராக் நாட்டின், மொசூல் நகரில் பணிபுரிந்த இந்தியாவைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலாளர்கள் 40 பேர் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
26/6: நேஷனல் ஹெரால்ட் பத்திரிகைக்கு சொந்தமான பலகோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை அபகரித்ததாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்த வழக்கில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு தில்லி நீதிமன்றம் சம்மன் அனுப்பி உத்தரவிட்டது.
30/6: ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து செலுத்தப்பட்ட செயற்கைக்கோள் செலுத்தும் வாகனமான சி-23 சோதனை வெற்றிகரமாக அமைந்தது.
ஜூலை
2/7: பெங்களூரில் விப்ஜியார் சர்வதேசப் பள்ளியில் 6 மாதக் குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து பெற்றோர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
4/7: பிரதமராகப் பதவியேற்ற பிறகு முதல் முறையாக ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்குச் சென்ற நரேந்திர மோடி, வைஷ்ணவி தேவி கோயில் உள்ள நகரமான கட்ராவுக்கு புதிய ரயில் சேவையை தொடக்கி வைத்தார்.
4/7: சொகுசு ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கில் இந்திய விமானப்படையின் முன்னாள் தலைமைத் தளபதி எப்.பி. தியாகி மீது அமலாக்கத் துறை இயக்ககம் வழக்குப் பதிவு செய்தது.
9/7: மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாஜகவுக்கு வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியைத் தேடித் தந்த அமித் ஷா, அக்கட்சியின் தேசியத் தலைவராக அறிவிக்கப்பட்டார்.
26/7: பிரதமர் மோடியின் அரசு 60 நாள்களை நிறைவு செய்ததது. நல்லாட்சியில் மக்களைப் பங்கேற்கச் செய்யும் வகையில், ம்ஹ்ஞ்ர்ஸ்.ய்ண்ஸ்ரீ என்ற இணையதளத்தை அவர் தொடக்கி வைத்தார்.
30/7: மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள மாலின் கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 153 பேர் உயிரிழந்தனர்.
ஆகஸ்ட்
5/8: தமிழக முதல்வர் ஜெயலலிதா குறித்து இலங்கை பாதுகாப்புத் துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டிருந்த அவதூறு கருத்துகளுக்கு அந்நாட்டு அதிபர் ராஜபட்ச வருத்தம் தெரிவித்தார்.
6/8: பாதுகாப்புத் துறையில் அன்னிய நேரடி முதலீட்டை 26 சதவீதத்தில் இருந்து 49 சதவீதமாக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
6/8: குஜராத் முதல்வராக நரேந்திர மோடி இருந்தபோது அவருடன் மோதல் போக்கைக் கடைப்பிடித்து வந்த அந்த மாநில ஆளுநர் கமலா பெனிவால், பின்னர் பதவி வகித்து வந்த மிஸோராம் மாநில ஆளுநர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
11/8: உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகளை உச்ச நீதிமன்ற நீதிபதிகளே தேர்வு செய்யும் முறைக்கு மாற்றம் கொண்டு வரும் வகையில், தேசிய நீதிபதிகள் நியமன ஆணைய மசோதா மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது.
12/8: ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் 2 மின் உற்பத்தித் திட்டங்களை பிரதமர் மோடி தொடக்கி வைத்தார்.
13: மக்களவைத் துணைத் தலைவராக கரூர் தொகுதி உறுப்பினர் தம்பிதுரை (67) ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார்.
14/8: இமயலையில் கடும் மழை பெய்ததால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் 1500 கிராமங்கள் மூழ்கின. இதில், சுமார் 80 பேர் உயிரிழந்தனர்.
14/8: கொள்ளைக் கூட்ட முன்னாள் தலைவி பூலான் தேவியைக் கொன்ற வழக்கில் ஷேர் சிங் ராணாவுக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
16/8: இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ஐ.என்.எஸ். கொல்கத்தா போர்க் கப்பலை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார்.
18/8: பிகார் மாநிலம், சினவ்தா கிராமப் பகுதியில் ஆட்டோ மீது ரயில் மோதிய விபத்தில் 21 பேர் உயிரிழந்தனர்.
26/8: கேரள மாநில ஆளுநர் பதவியில் இருந்து ஷீலா தீட்சித் ராஜிநாமா செய்தார்.
28/8: "ஜன் தன்' எனப்படும் மக்கள் நிதித் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.