மே முதல் ஆகஸ்ட் வரை
3 போர்ச்சுகல் ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிரஸா, ஜிம்பாப்வேயின் காரா பிளாக் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.
மே
3/5 போர்ச்சுகல் ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிரஸா, ஜிம்பாப்வேயின் காரா பிளாக் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.
6/5 ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கத் தலைவராக ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த முடிவு வெளியான ஒரு மணி நேரத்தில், ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கத்தை பிசிசிஐ இடை நீக்கம் செய்தது.
Advertisement
Advertisement
11/5 :ஸ்பெயின் கிராண்ட் ப்ரீ ஃபார்முலா ஒன் கார் பந்தயத்தில் மெர்சிடிஸ் அணியைச் சேர்ந்த பிரிட்டன் டிரைவர் லீவிஸ் ஹாமில்டன் சாம்பியன் பட்டம் வென்றார்.
14/5 குத்துச்சண்டை இந்தியா அமைப்புக்கு சர்வதேச குத்துச்சண்டை அமைப்பு ஒப்புதல் அளித்தது.
24/5 சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் இறுதி ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் அணி 4-1 என்ற கோல் கணக்கில் அட்லெடிகோ மாட்ரிட் அணியை வீழ்த்தி, பத்தாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
29/5 மொனாக்கோ கிராண்ட் ப்ரீ ஃபார்முலா ஒன் கார்பந்தயத்தில் மெர்சிடிஸ் அணியைச் சேர்ந்த ஜெர்மனி கார் டிரைவர் நிகோலஸ் ரோஸ்பெர்க் சாம்பியன் பட்டம் வென்றார்.
ஜூன்
1/6 பெங்களூரில் நடைபெற்ற ஏழாவது ஐபிஎல் இறுதி ஆட்டத்தில் ரித்திமான் சாஹா சதம் விளாசி உதவ, பஞ்சாப் அணி 119 ரன்கள் குவித்தது. ஆனால், இந்த இலக்கை சேஸ் செய்து, 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது கொல்கத்தா அணி.
7/6 பிரெஞ்சு ஓபன் இறுதி ஆட்டத்தில் ரஷியாவின் மரியா ஷரபோவா, ருமேனியாவின் சிமானோ ஹாலேப்பை வீழ்த்தி கிராண்ட் ஸ்லாம் வென்றார்.
8/6 பிரெஞ்சு ஓபன் இறுதி ஆட்டத்தில் செர்பியாவின் ஜோகோவிச்சை வீழ்த்தி 9-ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் ஸ்பெயினின் ரஃபேல் நடால்.
15/6 உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் நெதர்லாந்தை வீழத்தி ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் வென்றது.
16/6 துபையில் நடைபெற்ற ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் உலக சாம்பியனான மேக்னஸ் கார்ல்ùஸன் பட்டம் வென்றார்.
25/6 சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) சேர்மனாக சீனிவாசன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
29/6 ஆஸ்திரேலிய ஓபன் பாட்மிண்டன் போட்டியின் மகளிர் பிரிவில் இந்தியாவின் சாய்னா நெவால், ஸ்பெயினின் கரோலினா மரினை வீழ்த்தி சாம்பியன் ஆனார்.
ஜூலை
13/7 பிரேசிலில் நடைபெற்ற ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதி ஆட்டத்தில் ஜெர்மனி அணி ஆர்ஜெண்டினாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. ஜெர்மனியின் மரியோ கோட்ச வெற்றிக்கான கோலை அடித்தார். இதன் மூலம் தென் அமெரிக்க கண்டத்தில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் ஐரோப்பிய நாடு என்ற பெருமையை ஜெர்மனி பெற்றது.
18/7 உலகச் சாம்பியனான ஜெர்மனி கால்பந்து அணியின் கேப்டன் பிலிப் லாம், சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு பெற்றார்.
27/7 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் பளுதூக்குதல் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த சதீஷ் சிவலிங்கம் தங்கம் வென்றார்.
ஆகஸ்ட்
1/8 காமன்வெல்த்: டேபிள் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த சரத் கமல், அந்தோணி அமல் ராஜ் ஜோடி வெள்ளிப் பதக்கம் வென்றது.
2/8 காமன்வெல்த்: மகளிருக்கான இரட்டையர் பிரிவு ஸ்குவாஷ் போட்டியில் தமிழகத்தின் தீபிகா பல்லிகல், ஜோஷ்னா சின்னப்பா ஜோடி தங்கப் பதக்கம் வென்றது.
3/8 காமன்வெல்த்: பாட்மிண்டன் போட்டியில் ஆந்திர வீரர் காஷ்யப் தங்கம் வென்றார். ஹாக்கியில் இந்திய அணி இரண்டாவது இடத்தைப் பிடித்தது. இதன் மூலம் காமன்வெல்த் போட்டியில் இந்தியா மொத்தம் 64 பதக்கங்களை (15 தங்கம், 30 வெள்ளி, 19 வெண்கலம்) வென்றது.
17/8 இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-1 என வென்றது இங்கிலாந்து.
19/8 இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா படு தோல்வியடைந்ததால், ஒரு நாள் தொடருக்கான அணியின் இயக்குநராக ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.