FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

அக்டோபர்

18 நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் அணியினர் அமோக வெற்றி பெற்று சாதனை படைத்தனர்.

28 ஜூலை 2025, 9:54 am
பகிர்:

தமிழ்நாடு

18. நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் அணியினர் அமோக வெற்றி பெற்று சாதனை படைத்தனர். தலைவர் பதவிக்கு நாசரும், பொதுச் செயலாளர் பதவிக்கு விஷாலும், பொருளாளர் பதவிக்கு கார்த்தியும் தேர்வாகினர்.

30. மதுவிலக்கு போராட்டத்தை வலுப்படுத்தும் நோக்கத்துடன் "டாஸ்மாக்கை மூடு' என்ற பாடலை இயற்றி பாடிய மக்கள் கலை இலக்கியக் கழக பாடகர் கோவனை திருச்சியில் போலீஸார் கைது செய்தனர்.

*******************

இந்தியா

5. இந்தியா வந்த ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கலுடன் பிரதமர் மோடி நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே 18 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.

Advertisement

Advertisement

7. ரிசர்வ் வங்கி உள்ளிட்ட சில அமைப்புகள் மூலம் அரசின் நலத்திட்டங்கள் கிடைக்கப்பெற ஆதார் அட்டை அவசியமாக்கப்படக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

11. ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவை ரத்து செய்யவோ, திருத்தம் செய்யவோ அனுமதிக்க முடியாது என்று அந்த மாநில உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

16. உயர் நீதிமன்றங்கள், உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகளைத் தேர்வு செய்வதற்காக மத்திய அரசு கொண்டு வந்த தேசிய நீதிபதிகள் நியமன ஆணையச் சட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.

25. பிரபல நிழல் உலக தாதா சோட்டா ராஜன் இந்தோனேசியாவில் அந்நாட்டு போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

28. இந்தியாவுக்கு வருகைத் தந்த முகநூல் நிறுவனர் மார்க் ஜக்கர்பர்க், இணையச் சமநிலைக் கொள்கைக்கு முழு ஆதரவு அளிப்பதாக உறுதியளித்தார்.

*******************

விளையாட்டு

18. ஐபிஎல் போட்டிக்கு ஸ்பான்சர் செய்வதில் இருந்து விலகுவதாக அறிவித்தது பெப்சி நிறுவனம்.

18. ஐபிஎல் போட்டியிலிருந்து 2 ஆண்டுகளுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள சென்னை, ராஜஸ்தான் ஆகிய அணிகளுக்குப் பதிலாக இரு புதிய அணிகள் சேர்க்கப்படும் என பிசிசிஐ அறிவித்தது.

20. சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடை பெறுவதாக அறிவித்தார் இந்திய அணியின் அதிரடி தொடக்க வீரரான வீரேந்திர சேவாக்.

*******************

உலகம்

12. நேபாளத்தின் 38-ஆவது பிரதமராக கே.பி.சர்மா ஒலி (63) தேர்வு. இரு துணைப் பிரதமர்களுடன் பதவியேற்பு.

20. கனடா நாடாளுமன்றத் தேர்தலில் சுதந்திரக் கட்சியின் ஜஸ்டின் ட்ரூடோ அமோக வெற்றி பெற்றுப் பிரதமராகத் தேர்வு.

31. எகிப்தின் ஷரம் அல்-ஷேக் ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகருக்கு 224 பயணிகளை ஏற்றிச் சென்ற ரஷிய விமானம் எகிப்தில் நொறுங்கி விழுந்தது. இஸ்லாமிய தேச பயங்கரவாதிகள் இதற்குப் பொறுப்பேற்றனர்.

*******************

சினிமா

1. நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் அணியினருக்கு தன் நேரடி ஆதரவை தெரிவித்தார் நடிகர் கமல்ஹாசன்.

6. அகில இந்த மகளிர் காங்கிரஸ் பொதுச் செயலாளராக நடிகை நக்மா தேர்வு செய்யப்பட்டார்.

18. நடிகர் சங்கத் தேர்தலில் நடிகர் விஷால் அணி அமோக ஆதரவு பெற்றது.

29. நீதிமன்றம் குறித்து அவதூறாக பேசியதாக கவிஞர் வைரமுத்து மீது வழக்கு தொடரப்பட்டது.

30. நடிகர் விவேக்கின் மகன் பிரசன்னகுமார் மரணமடைந்தார்.

*******************

விருதுகள்

6. ஜப்பானைச் சேர்ந்த விஞ்ஞானி தகாகி காஜிடா, கனடாவின் ஆர்தர் பி.மெக்டொனால்டு ஆகியோருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.

*******************

உதிர்ந்த மலர்கள்

9. பிரபல புல்லாங்குழல் இசை மேதை என்.ரமணி (81) சென்னையில் வெள்ளிக்கிழமை காலமானார்.

10. பழம்பெரும் நடிகை "ஆச்சி' மனோரமா காலமானார். அவருக்கு வயது 78. பத்ம ஸ்ரீ விருதை பெற்றுள்ள இவர் சுமார் 1,500 திரைப்படங்களுக்கும் மேல் நடித்து கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments