FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஆகஸ்ட்

கழிவுகளை திறம்பட மறு சுழற்சி செய்வதன் அடிப்படையில், மத்திய அரசு வெளியிட்ட தூய்மை இந்தியா தர வரிசைப் பட்டியலில், திருச்சி நகரம் இரண்டாம் இடத்தைப் பிடித்தது.

28 ஜூலை 2025, 9:54 am
பகிர்:

தமிழ்நாடு

8. கழிவுகளை திறம்பட மறு சுழற்சி செய்வதன் அடிப்படையில், மத்திய அரசு வெளியிட்ட தூய்மை இந்தியா தர வரிசைப் பட்டியலில், திருச்சி நகரம் இரண்டாம் இடத்தைப் பிடித்தது.

9. மாநிலத் தலைமை தகவல் ஆணையராக, முன்னாள் டிஜிபி ராமானுஜம் பொறுப்பேற்று கொண்டார். வழக்கறிஞர் ஜி.முருகன், நீதிபதி ஆர்.தட்சிணாமூர்த்தி ஆகியோரும் மாநில தகவல் ஆணையர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர்.

*******************

இந்தியா

3. நாகாலாந்து தீவிரவாத அமைப்புகளுடன் மத்திய அரசு அமைதி ஒப்பந்தம் மேற்கொண்டது.

Advertisement

Advertisement

5. மத்தியப் பிரதேச மாநிலம், ஹார்டா மாவட்டத்தில் இரு ரயில்கள் ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 29 பேர் பலியாகினர்.

11. அரசு நலத் திட்டங்கள் பெற ஆதார் அட்டை கட்டாயமில்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு.

25. சொந்த மகளையே (ஷீனா போரா) கொலை செய்ததாக தனியார் தொலைக்காட்சியின் நிறுவனர் இந்திராணி முகர்ஜியை மும்பை போலீஸார் கைது செய்தனர்.

27. பொலிவுறு நகரங்கள் திட்டத்துக்கு தேர்வு செய்யப்பட்ட 98 நகரங்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டது. அதில் தமிழகத்தின் 12 நகரங்கள் இடம்பெற்றிருந்ததன.

27. ஜிசாட்-6 செயற்கைகோளுடன் ஜிஎஸ்எல்வி டி-6 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

30. கன்னட எழுத்தாளரும், பகுத்தறிவுவாதியுமான கலபுர்கி, மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

*******************

விளையாட்டு

15. உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார் இந்தியாவின் சாய்னா நெவால். இதன்மூலம் உலக பாட்மிண்டனில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்.

16. உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் சாய்னா நெவால் 16-21, 19-21 என்ற நேர் செட்களில் ஸ்பெயினின் கரோலினா மரினிடம் தோற்று வெள்ளிப் பதக்கத்தோடு வெளியேறினார்.

23. சீன தலைநகர் பெய்ஜிங்கில் நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் ஆடவர் 100 மீ. ஓட்டத்தில் 9.79 விநாடிகளில் இலக்கை எட்டி தங்கம் வென்றார் ஜமைக்காவின் உசேன் போல்ட். இதன்மூலம் ஜஸ்டின் கேட்லினை போல்ட் சமாளிப்பாரா என்ற ஊகத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

*******************

உலகம்

13. சீனாவின் தியான்ஜின் நகரில் ரசாயன கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 173 பேர் உயிரிழந்தனர்; 700-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த தீ விபத்தில், துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான கார்களும் எரிந்து நாசமாயின.

16. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் அமைச்சர் ஷுஜா கான்ஸாதா பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்டார். தனது இல்லத்தில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலில், மேலும் 18 பேர் கொல்லப்பட்டனர்.

18. இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான நல்லாட்சிக் கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றதாக அறிவிப்பு.

21. இலங்கை பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்பு.

*******************

சினிமா

1. வறுமையால் வாடி வந்த நடிகை பறவை முனியம்மாவுக்கு உதவிடும் வகையில் எம்.ஜி.ஆர். அறக்கட்டளையிலிருந்து ரூ. 5 லட்சமும், மாதம் ரூ. 5 ஆயிரமும் அளித்து உதவினார் தமிழக முதல்வர் ஜெயலலிதா.

12. சிலை கடத்தல் வழக்கில் இயக்குநர் வி.சேகர் கைது செய்யப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments