FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஏப்ரல்

கொம்பன் திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரிய மனு மதுரை உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி.

28 ஜூலை 2025, 9:54 am
பகிர்:

தமிழ்நாடு

1. கொம்பன் திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரிய மனு மதுரை உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி.

5. பொறியாளர் முத்துக்குமாரசாமி தற்கொலை தொடர்பாக வேளாண்துறை அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, தலைமைப் பொறியாளர் செந்தில் ஆகியோர் கைது.

7. ஆந்திர மாநிலம் சித்தூர் வனப்பகுதியில் செம்மரக்கட்டை கடத்தலில் ஈடுபட்டதாக தமிழகத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் 20 பேர் ஆந்திர மாநில போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

Advertisement

Advertisement

13. சென்னை உயர்நீதிமன்றத்துக்கு பழையனூர் நாராயண பிரகாஷ், புஷ்பா சத்யநாராயணா, ஆர்.மகாதேவன் உள்ளிட்ட 8 நீதிபதிகளை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நியமித்தார்.

25. பாலியல் வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட டாக்டர் பிரகாஷை நன்னடத்தை காரணமாக சென்னை உயர்நீதிமன்றம் விடுதலை செய்தது.

*******************

இந்தியா

2. மும்பையில் நடத்தப்பட்ட பகவத் கீதை தொடர்பான எழுத்துப் போட்டியின் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் விதமாக மர்யம்

சித்திகுய் என்ற 12 வயது முஸ்லிம் மாணவி வெற்றி பெற்றார். மொத்தம் 195 பள்ளிகளில் இருந்து கலந்து கொண்ட 4,500 மாணவர்களைப் பின்னுக்குத் தள்ளி இந்தச் சிறுமி முதலிடம் பிடித்தார்.

10. மத்திய உளவுத் துறையின் (ஐ.பி.) மிக முக்கியமான இரண்டு ஆவணங்கள் அம்பலமாயின. இதன்படி கொல்கத்தாவில் வசிந்து வந்த நேதாஜியின் நெருங்கிய உறவினர்கள் இருவரது குடும்பங்களை 1948 முதல் 1968-ஆம் ஆண்டு வரை உளவுத் துறை நோட்டமிட்டது வெளிச்சத்துக்கு வந்தது.

10. அமில வீச்சால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிறப்பு அறுவை சிகிச்சை, மருந்துகள், உணவு உள்பட அனைத்து சிகிச்சைகளையும் இலவசமாக செய்ய வேண்டும் என தனியார் மருத்துவமனைகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

15. கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்பரை சந்தித்து பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து, அந்நாட்டில் இருந்து இந்தியாவுக்கு வர்த்தக ரீதியில் யுரேனியம் இறக்குமதி செய்வதற்கான மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

15. சமாஜவாதி, ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம், இந்திய தேசிய லோக் தளம், மதச்சார்பற்ற ஜனதா தளம், சமாஜவாதி ஜனதா கட்சி ஆகிய ஆறு கட்சிகள் ஒன்றாக இணைக்கப்படவுள்ளதாக கூட்டாக அறிவிக்கப்பட்டது. எனினும், இந்த இணைப்பு முயற்சி பின்னாளில் தோல்வியைத் தழுவியது.

16. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் முறைப்படி விடுமுறை பெற்றுக் கொண்டு வெளிநாடுகளில் 56 நாள்கள் ஓய்வு எடுத்த அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி, ஏப்ரல் 16-ஆம் தேதி பாங்காக்கில் இருந்து தில்லி திரும்பினார். முன்னதாக, ராகுல் காந்தியின் இந்த ஓய்வு குறித்து பலத்த சர்ச்சைகள் எழுந்தன.

19. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக சீதாராம் யெச்சூரி தேர்வு செய்யப்பட்டார். இதற்கான தீர்மானம் அக்கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

19. நாட்டின் 20-ஆவது தலைமைத் தேர்தல் ஆணையராக நஜீம் ஜைதி பதவியேற்றுக் கொண்டார். இந்தப் பதவியில், அவர் தனது 65 வயது வரை, அதாவது, 2017-ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரை நீடிப்பார்.

22. மத்திய அரசின் நிலம் கையக அவசரச் சட்டத்துக்கு எதிராக தில்லியில் முதல்வர் கேஜரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் பேரணி நடைபெற்றது. அப்போது, ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கஜேந்திர சிங் என்ற விவசாயி திடீரென மரத்தில் ஏறி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

28. தில்லி மாநில சட்டத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் தோமரின் கல்விச் சான்றிதழ் போலியானது என்று குற்றச்சாட்டு எழுந்தது. அது நிரூபணம் ஆனதால், தோமர் பதவியிழந்தார்.

*******************

உலகம்

2. கென்யாவின் காரிஸா பல்கலைக்கழகத்தில் சோமாலியாவைச் சேர்ந்த அல்-ஷெபாப் பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் 147 மாணவர்கள் உயிரிழந்தனர்.

2. ரஷியாவையொட்டிய கடல் பகுதியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதிலிருந்த 56 பேர் உயிரிழந்தனர். 63 பேர் மீட்கப்பட்டனர்.

4. 100 வயது ஜப்பானியப் பெண் மீகோ நாகோகா, 1,500 மீட்டர் தொலைவு நீச்சலடித்து உலக சாதனை புரிந்தார்.

10. 2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்குக் காரணமான ஜகியுர் ரஹ்மான், பாகிஸ்தானின் லாகூர் உயர் நீதிமன்ற உத்தரவையடுத்து சிறைக் காவலிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

25. நேபாளத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்திலும், அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட பின்னதிர்விலும் 8,349 பேர் உயிரிழந்தனர். 17,870 பேர் காயமடைந்தனர்.  ரிக்டர் அளவுகோலில் 7.9 அலகுகளாகப் பதிவான அந்த நிலநடுக்கத்துக்கு, இந்தியாவில் 62 பேர் பலியாகினர்.

*******************

விளையாட்டு

3. இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, தனது இளம் வயது தோழியான பிரியங்காவை மணந்தார்.

12. மகளிர் இரட்டையர் டென்னிஸ் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார் சானியா மிர்சா.

*******************

சினிமா

25. இயக்குநர் செல்வா கொலை வழக்கில் துணை நடிகை சங்கீதாவுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

28. கடவுள் விஷ்ணுவை கொச்சைப்படுத்தும் விதமாக காட்சிகள் வைத்திருப்பதாக கூறி "உத்தம வில்லன்' படத்துக்கு எதிராக விஷ்வ ஹிந்து பரிஸத் அமைப்புகள் போராட்டத்தில் குதித்தன.

29. தன்னைப் பற்றி அவதூறு பரப்புவதாக தணிக்கை குழு அதிகாரி பக்கிரிசாமி மீது நடிகர் எஸ்.வி. சேகர் புகார் அளித்தார்.

*******************

உதிர்ந்த மலர்கள்

8. திமுகவின் பிரசார பாடகரும், திரைப்படப் பாடகருமான நாகூர் ஈ.எம்.ஹனீஃபா (97) சென்னையில் காலமானார்.

8. பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் சென்னை கே.கே.நகரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 81. பத்ம பூஷண் விருது, ஞான பீட விருது ஆகியவற்றை பெற்ற மிகச் சிறந்த எழுத்தாளார் இவர்.

21. ஒடிஸா மாநிலத்தில் 3 முறை முதல்வராகவும், அஸ்ஸாம் மாநில ஆளுநராகவும் பதவி வகித்த ஜானகி வல்லப பட்நாயக் ஆந்திர மாநிலம், திருப்பதியில் காலமானார்.

29. பிரபல கார்ட்டூனிஸ்ட் எஸ்.கோபாலன் (எ) கோபுலு சென்னையில் காலமானார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments