FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

நவம்பர்

இந்தியத் தலைமை தேர்தல் ஆணையத்தின் துணை ஆணையராக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா நியமிக்கப்பட்டார்.

28 ஜூலை 2025, 9:54 am
பகிர்:

தமிழ்நாடு

2. இந்தியத் தலைமை தேர்தல் ஆணையத்தின் துணை ஆணையராக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா நியமிக்கப்பட்டார்.

4. ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் மீது தொடரப்பட்ட வருமான வரி வழக்கில், அவர்கள் இருவரையும் விடுவித்து சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

*******************

இந்தியா

5. தங்க முதலீடு செய்து பணம் ஈட்டும் 3 திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார்.

Advertisement

Advertisement

5. நாட்டில் சகிப்பின்மை நிலவுவதாகக் கூறி திரைக் கலைஞர்கள் 10 பேர், தங்களது விருதுகளைத் திருப்பி அளித்தனர்.

6. இந்தோனேசியாவில் கைதான மும்பை நிழல் உலக தாதா சோட்டா ராஜன் தில்லி அழைத்துவரப்பட்டார்.

7. ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களுக்கான ஒரே பதவிக்கு ஒரே ஓய்வூதியம் திட்டம் அமல்படுத்தப்பட்டது.

8. பிகார் சட்டப் பேரவைத் தேர்தலில் நிதீஷ் குமார் தலைமையிலான மகா கூட்டணி 178 இடங்களில் அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. இதைத் தொடர்ந்து, நவம்பர் 20-ஆம் தேதி அந்த மாநிலத்தின் முதல்வராக நிதீஷ் பதவியேற்றார்.

12. இந்தியா - பிரிட்டன் இடையே அணுசக்தி ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

23. சகிப்பின்மை தொடர்பாக ஹிந்தி நடிகர் ஆமிர் கான் தெரிவித்த கருத்து பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியது.

*******************

விளையாட்டு

9. ஐசிசி சேர்மன் பதவியில் இருந்து என்.சீனிவாசனை திரும்பப் பெற்றுவிட்டு அவருக்குப் பதிலாக சஷாங்க் மனோகரை சேர்மனாக்குவது என பிசிசிஐ பொதுக்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

17. சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சன் ஓய்வு.

29. டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் 79 ஆண்டுகளுக்குப் பிறகு வாகை சூடியது பிரிட்டன்.

*******************

உலகம்

13. மியான்மர் நாடாளுமன்றத் தேர்தலில் ஆங் சான் சூகி தலைமையில் தேசிய ஜனநாயகக் கட்சி அமோக வெற்றி. ஆயினும், தற்போதைய சட்டப்படி அவர் அந்நாட்டில் பிரதமர் பதவி வகிக்க முடியாது.

13. பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் பல்வேறு இடங்களில் நிகழ்ந்த தொடர் பயங்கரவாதத் தாக்குதலில் 130 பேர் உயிரிழந்தனர். இஸ்லாமிய தேச பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த 8 பேர் இத்தாக்குதல்களை நிகழ்த்தினர்.

24. ரஷிய போர் விமானத்தை சிரியாவையொட்டிய எல்லைப் பகுதியில் துருக்கி போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தின. தங்கள் நாட்டின் வான் எல்லைக்குள் ரஷிய போர் விமானம் அத்துமீறியதாக துருக்கி குற்றஞ்சாட்டியது.

26. இஸ்லாமிய தேச பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் ரஷியா - பிரான்ஸ் ஒருங்கிணைந்து செயல்பட ஒப்பந்தம் ஏற்பட்டது.

*******************

சினிமா

7. பொதுப் பிரச்னைகளில் நடிகர் சங்கம் தலையிடாது என்ற விஷாலின் கருத்துக்கு எதிர்ப்பு கிளம்பியது.

9. ரூ. 3கோடி சம்பள பாக்கி உள்ளதாக "புலி' படத்தின் தயாரிப்பாளர் மீது நடிகை ஸ்ரீதேவி புகார் அளித்தார்.

12. நடிகர் அஜிóத்துக்கு கால் பகுதியில் அறுவை சிகிச்சை நடந்தது.

16. நயன்தாரா ரோம் சென்று பிஷப்பிடம் ஆசி பெற்றார்.

20. கோவாவில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

*******************

உதிர்ந்த மலர்கள்

14. பிரபல தமிழ் திரைப்பட இயக்குநர் கே.எஸ்.கோபாகிருஷ்ணன் (86) காலமானார்.

17. பிரபல ஆன்மிக பாடகர் பித்துக்குளி முருகதாஸ் (95) உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார்.

24. காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ ஏ.எஸ்.பொன்னம்மாள் (88) காலமானார். இவர் 7 முறை எம்எல்ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments