FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பிப்ரவரி

முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் திமுக பொதுச் செயலர் கே.அன்பழகனை மனுதாரராகச் சேர்க்க கர்நாடக உயர்நீதிமன்றம் மறுப்பு.

28 ஜூலை 2025, 9:54 am
பகிர்:

தமிழ்நாடு

5. முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் திமுக பொதுச் செயலர் கே.அன்பழகனை மனுதாரராகச் சேர்க்க கர்நாடக உயர்நீதிமன்றம் மறுப்பு.

14. எந்த வித காரணத்துக்காகவும் சுதந்திரப் போராட்ட தியாகிகள், பாதுகாப்பு படையினரின் அசையும், அசையா சொத்துகளை பறிமுதல் செய்யக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

16. ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் எஸ்.வளர்மதி 1 லட்சத்து 51.561 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஆனந்தன் 55,045 வாக்குகள் பெற்றார்.

Advertisement

Advertisement

*******************

இந்தியா

4. உள்துறைச் செயலாளர் அனில் கோஸ்வாமியை மத்திய அரசு பதவிநீக்கம் செய்தது. சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் மத்திய முன்னாள் அமைச்சர் மதங் சின் மீதான கைது நடவடிக்கைக்கு அவர் தடை ஏற்படுத்தியாக புகார் கூறப்பட்டது.

10. தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 67 இடங்களைக் கைப்பற்றி ஆம் ஆத்மி கட்சி இமாலய வெற்றி பெற்றது. பெரிதும் எதிர்பார்ப்பில் இருந்த பாஜக 3 இடங்களை மட்டுமே கைப்பற்றியது.

14. தில்லி முதல்வராக அரவிந்த் கேஜரிவால் பதவியேற்றார்.

22. ஜிதன்ராம் மாஞ்சி பதவி விலகியதை அடுத்து, பிகார் முதல்வராக நிதீஷ் குமார் மீண்டும் பதவியேற்றுக் கொண்டார். அவருடன் 22 அமைச்சர்களும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

*******************

உலகம்

2. எகிப்தில் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் அதிபர் முகமது மோர்ஸிக்கு ஆதரவான ஆர்ப்பாட்டத்தில், 13 போலீஸாரைக் கொன்ற குற்றத்துக்காக 183 பேருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை அந்த நாட்டு நீதிமன்றம் உறுதி செய்தது.

11. ஆப்பிரிக்காவிலிருந்து ஐரோப்பிய நாடுகளை நோக்கிச் சென்ற அகதிகள் படகு மத்தியதரைக் கடலில் கவிழ்ந்து 300 பேர் உயிரிழந்தனர்.

22. பயங்கரவாதக் குற்றச்சாட்டின்கீழ் மாலத்தீவு முன்னாள் அதிபர் முகமது நஷீத் கைது செய்யப்பட்டார்.

25. யேமனின் முன்னாள் அதிபர் அலி அப்துல்லா சலே, தனது 33 ஆண்டுகால ஆட்சியில், 3,200 கோடி டாலர் முதல் (சுமார் ரூ.2 லட்சம் கோடி) 6,000 கோடி டாலர் வரை (சுமார் ரூ.4 லட்சம் கோடி) ஊழல் செய்திருப்பதாக ஐ.நா. தெரிவித்தது.

28. ரஷியாவின் முன்னாள் துணைப் பிரதமரும், மக்கள் அபிமானம் பெற்ற எதிர்க்கட்சித் தலைவருமான போரிஸ் நெம்ட்ஸோவ் படுகொலை செய்யப்பட்டார்.

*******************

விளையாட்டு

1. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் பிரிட்டனின் ஆன்டி முர்ரேவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் செர்பியாவின் நோவக் ஜோகோவிச். இது அவருடைய 8-வது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும்.

1. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பயஸ்-ஸ்விட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.

24. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஜிம்பாப்வேக்கு எதிரான ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகளின் கிறிஸ் கெயில் 215 ரன்கள் விளாசினார். இதன்மூலம் உலகக் கோப்பையில் இரட்டைச் சதமடித்த முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.

27. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 52 பந்துகளில் சதமடித்ததன் மூலம் உலகக் கோப்பை வரலாற்றில் அதிவேக சதமடித்தவர்கள் வரிசையில் 2-வது இடத்தைப் பிடித்தார் தென் ஆப்பிரிக்க கேப்டன் டிவில்லியர்ஸ்.

*******************

சினிமா

7. ரஜினியை தவறாக சித்தரிப்பதாக கூறி ஹிந்தியில் வெளியாக இருந்த "மேக் கூன் ரஜினி' படத்திற்கு தடை விதிக்கப்பட்டது.

10. கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியாக இருந்த "அனேகன்' படம் வண்ணார் சமூகத்தை இழிவுப்படுத்துவதாக கூறி வழக்கு தொடரப்பட்டது.

23. தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தில் அம்மா அன்னதான திட்டத்தை இசையமைப்பாளர் இளையராஜா தொடங்கி வைத்தார்.

24. ருத்ராட்சை தாலி அணிந்ததாக சர்ச்சையில் சிக்கினார் நடிகை குஷ்பூ. இது குறித்து பல்வேறு அமைப்புகள் போராட்டங்களில் குதித்தது.

*******************

விருதுகள்

10. பொருளாதாரத் துறையில் சிறந்து விளங்குவோரை கெளரவிக்கும் வகையில் பிரிட்டன் அரசு உருவாக்கிய ஜான் மேனார்டு கீன்ஸ் விருது இந்தியப் பொருளாதார அறிஞரும், நோபல் பரிசு பெற்றவருமான அமர்த்தியா சென்னுக்கு வழங்கப்பட்டது.

*******************

உதிர்ந்த மலர்கள்

16. மகாராஷ்டிர மாநில முன்னாள் துணை முதல்வரும், தேசிவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஆர்.ஆர்.பாட்டீல் (57) காலமானார்.

18. ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பிரபல திரைப்படத் தயாரிப்பாளரான டகுபதி ராமநாயுடு (78) புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments