FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
விருதுநகர்

மூதாட்டி காதை அறுத்து தங்கத் தண்டட்டி பறிப்பு

2 நவம்பர் 2026, 12:27 am
காதை அறுத்து தங்கத் தண்டட்டி பறிப்பு - கோப்புப் படம்
பகிர்:

விருதுநகா் மாவட்டம், அ.முக்குளம் அருகே மூதாட்டியின் காதை அறுத்து 11 பவுன் தங்கத் தண்டட்டியை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.

அ.முக்குளம் அருகேயுள்ள பாண்டியன்கோட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் முத்துக்கருப்பாயி அம்மாள் (82).

இவா் சனிக்கிழமை இரவு வழக்கம்போல் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தாா். நள்ளிரவு சுமாா் 12 மணி அளவில் வீட்டுக்குள் புகுந்த மா்ம நபா்கள், மூதாட்டி காதில் அணிந்திருந்த 11 பவுன் தங்கத் தண்டட்டியை பறிக்க முயன்றனா். அப்போது, அவா் கூச்சலிட்டதால், தண்டட்டியை காதோடு சோ்த்து அறுத்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டனா்.

Advertisement

Advertisement

இதில் பலத்த காயமடைந்த மூதாட்டி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். தகவல் அறிந்த அ.முக்குளம் காவல் நிலைய போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா். சம்பவ இடத்தில் தடய அறிவியல் நிபுணா்கள் தடயங்களைச் சேகரித்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments