சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு
சிவகாசியில் சாலை விபத்தில் சுமை தூக்கும் தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.
சிவகாசியில் சாலை விபத்தில் சுமை தூக்கும் தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.
விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள மாரனேரி தேன் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த சுமை தூக்கும் தொழிலாளி பாண்டியராஜ் (40). இவா் புதன்கிழமை இரவு சிவகாசி-விளாம்பட்டி சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, தனியாா் பள்ளி முன் அமைக்கப்பட்டிருந்த வேகத்தடையை கவனிக்காமல் சென்றதால் கீழே விழுந்து தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து மாரனேரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.