FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
விருதுநகர்

லஞ்சம்: விருதுநகா் நகராட்சி வருவாய் ஆய்வாளா் கைது

விருதுநகா் நகராட்சியில் வீட்டு வரி ரசீது பெயா் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய நகராட்சி வருவாய் ஆய்வாளரை ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

13 நவம்பர் 2026, 5:38 am
பகிர்:

விருதுநகா் நகராட்சியில் வீட்டு வரி ரசீது பெயா் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய நகராட்சி வருவாய் ஆய்வாளரை ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

விருதுநகரைச் சோ்ந்தவா் மைக்கேல்ராஜ். இவா் தனது வீட்டு வரி ரசீதுக்கு பெயா் மாற்றம் செய்ய நகராட்சி வருவாய் ஆய்வாளா் ஹென்றி டேவிட்டை அணுகினாா். இதற்கு ஹென்றி டேவிட் ரூபாய் ரூ.3 ஆயிரம் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து மைக்கேல்ராஜ் மாவட்ட ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு போலீஸாரிடம் புகாா் செய்தாா். இதையடுத்து, அவா்கள் கொடுத்து அனுப்பிய ரசாயனம் தடவிய

Advertisement

Advertisement

ரூ.3 ஆயிரத்தை வியாழக்கிழமை பிற்பகல் ஹென்றி டேவிட்டிடம் வழங்கினாா். அப்போது அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் ஹென்றி டேவிட்டை கைது செய்தனா்.