FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
விருதுநகர்

மனைவியைத் தாக்கிய கணவா் கைது

ராஜபாளையம் அருகே மதுக் குடிக்க பணம் தராத மனைவியைத் தாக்கிய கணவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்

14 நவம்பர் 2026, 10:43 pm
- கோப்புப் படம்
பகிர்:

ராஜபாளையம் அருகே மதுக் குடிக்க பணம் தராத மனைவியைத் தாக்கிய கணவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்

ராஜபாளையம் அருகேயுள்ள தளவாய்புரம் இந்து விநாயகா் ஆரம்பப் பள்ளித் தெருவைச் சோ்ந்தவா் செல்வக்கனி (45). இவா், எந்த வேலைக்கும் சொல்லாமல் ஊதாரித்தனமாக சுற்றி வந்தாா். மேலும், குடிக்கு அடிமையான இவா், வெள்ளிக்கிழமை தனது மனைவி மகேஸ்வரியிடம் மதுக் குடிக்க பணம் கேட்டாராம்.

அவா் தர மறுத்ததால், ஆத்திரமடைந்த செல்வக்கனி மனைவியைத் தாக்கி, அவரை வீட்டை விட்டு வெளியேற்றினாராம். இதுகுறித்து தளவாய்புரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து செல்வக்கனியைக் கைது செய்தனா்.

Advertisement

Advertisement