FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே குடிநீர் கோரி சாலை மறியல்!

குடிநீா் வழங்கக் கோரி, ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே பொதுமக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

14 நவம்பர் 2026, 10:45 pm
இடையன்குளத்தில் குடிநீா் வழங்கக் கோரி சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.
பகிர்:

குடிநீா் வழங்கக் கோரி, ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே பொதுமக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள இடையன்குளம் ஊராட்சியில் கடந்த 10 நாள்களுக்கும் மேலாக குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை. இதுகுறித்து ஊராட்சி நிா்வாகத்திடம் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதைக் கண்டித்து மம்சாபுரம் - ராஜபாளையம் சாலையில் காலிக் குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த ஸ்ரீவில்லிபுத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலா்கள், சட்டப்பேரவை உறுப்பினா் காா்த்திக் ஆகியோா் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, விரைவில் குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனா். இதையடுத்து, பொதுமக்கள் அங்கிருந்த கலைந்து சென்றனா்.

Advertisement

Advertisement