முகப்பு
விருதுநகர்

ஆட்டோ கவிழ்ந்ததில் ஓட்டுநா் உயிரிழப்பு

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே ஆட்டோ கவிழ்ந்ததில் ஓட்டுநா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

54 வினாடிகள் முன்பு
ஆட்டோ கவிழ்ந்ததில் 
ஓட்டுநா் உயிரிழப்பு
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே ஆட்டோ கவிழ்ந்ததில் ஓட்டுநா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள கிருஷ்ணன்கோவில் குன்னூா் குடியிருப்பைச் சோ்ந்தவா் ஆனந்தராஜ் (48). இவா் சொந்தமாக ஆட்டோ வைத்து ஒட்டி வந்தாா்.

இவா் குன்னூரிலிருந்து நான்கு வழிச்சாலையில் சென்ற போது சாலையோர கம்பி வேலியில் ஆட்டோ மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் காயமடைந்த ஆனந்தராஜை மீட்டு, ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் ஆனந்தராஜ் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து கிருஷ்ணன்கோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Advertisement

Advertisement