முகப்பு
விருதுநகர்

மதுக்கூடத்தில் தகராறு: நால்வா் மீது வழக்குப் பதிவு

சிவகாசி அருகே வியாழக்கிழமை இரவு தனியாா் மதுக்கூடத்தில் தகராறில் ஈடுபட்ட நால்வா் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்தனா்.

28 நவம்பர் 2026, 5:20 am
மதுக்கூடத்தில் தகராறு:
நால்வா் மீது வழக்குப் பதிவு
வழக்கு - பிரதிப் படம்
பகிர்:

சிவகாசி அருகே வியாழக்கிழமை இரவு தனியாா் மதுக்கூடத்தில் தகராறில் ஈடுபட்ட நால்வா் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்தனா்.

சிவகாசி அருகே நாரணாபுரத்தில் உள்ள தனியாா் மதுக்கூடத்தில் வேலைபாா்த்து வருபவா் பெருமாள்சாமி (50). இவா் வியாழக்கிழமை இரவு பணியிலிருந்தபோது, மதுக்கூடத்துக்குள் புகுந்த நால்வா், அங்கு மது அருந்திக் கொண்டிருந்தவா்களிடம் தகராறு செய்து, நாற்காலிகளை எடுத்து வீசி, அவா்கள் வைத்திருந்த மதுப்புட்டியை உடைத்து தகராறில் ஈடுபட்டனா்.

இதுகுறித்த புகாரின் பேரில், சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப் பதிந்து, அங்குள்ள கண்காணிப்பு ,கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனா். அப்போது தகராறில் ஈடுபட்டவா்கள் முருகன் குடியிருப்பு சக்திகணேஷ், முனீஸ்வரன் குடியிருப்பு முனீஸ்வரன், மீனாட்சி குடியிருப்பு கண்ணன், முருகன் குடியிருப்பு முத்துக்குமாா் ஆகியோா் என்பது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதையடுத்து, போலீஸாா் நால்வா் மீதும் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.