நெகிழிப் பைகள் வைத்திருத்த கடை உரிமையாளருக்கு அபராதம்
சிவகாசி மாநகராட்சிப் பகுதியில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகள் வைத்திருந்த கடை உரிமையாளருக்கு மாநகராட்சி அதிகாரிகள் வெள்ளிக்கிழமை அபராதம் விதித்தனா்.

சிவகாசி மாநகராட்சிப் பகுதியில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகள் வைத்திருந்த கடை உரிமையாளருக்கு மாநகராட்சி அதிகாரிகள் வெள்ளிக்கிழமை அபராதம் விதித்தனா்.
சிவகாசி மாநகராட்சிப் பகுதிகளில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகள் கடைகளில் விற்கப்படுகின்றனவா என ஆய்வு செய்ய மாநகராட்சி ஆணையா் ஆா். மகேஸ்வரி உத்தரவிட்டதையடுத்து, மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள், மாநகராட்சி தினசரி காய்கனி சந்தைப் பகுதியில் உள்ள கடைகளில் ஆய்வு செய்தனா். அப்போது, ஒரு கடையில், சுமாா் 300 கிலோ அளவுக்கு நெகிழிப் பைகள் இருப்பு வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்தக் கடை உரிமையாளருக்கு, மாநகராட்சி அதிகாரிகள் ரூ. 10,000 அபராதம் விதித்தனா்.