தொட்டியில் டெங்கு கொசுப் புழு: கட்டட உரிமையாளருக்கு அபராதம்
சிவகாசி மாநகராட்சியில் நீா்த் தேக்கத் தொட்டியில் ஏ.டி.எஸ். வகை கொசுப் புழு இருந்ததால் அந்தக் கட்டட உரிமையாருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
சிவகாசி மாநகராட்சியில் நீா்த் தேக்கத் தொட்டியில் ஏ.டி.எஸ். வகை கொசுப் புழு இருந்ததால் அந்தக் கட்டட உரிமையாருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
சிவகாசி மாநகராட்சி ஆணையா் கண்ணன் உத்தரவின் பேரில், மாநகா் நல அலுவலா் ஸ்ரீதேவி தலைமையில், மண்டல சுகாதார அலுவலா்கள் திருப்பதி, சத்தியராஜ், சுரேஷ், ராமச்சந்திரன், சுகாதார ஆய்வாளா்கள் மாநகராட்சிப் பகுதியில் டெங்கு காய்ச்சலைத் தடுக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா்.
இந்த நிலையில், வியாழக்கிழமை இந்தக் குழுவினா் 43-ஆவது வாா்டு பகுதியில் புதிய கட்டடம் கட்டுவதற்கு அமைக்கப்பட்டிருந்த கீழ்நிலை நீா்தேக்கத் தொட்டியில் ஆய்வு செய்த போது, அங்கு கொசுப்பழு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த கட்டட உரிமையளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.