பட்டாசுகளை பதுக்கியவா் கைது
திருத்தங்கலில் சட்டவிரோதமாக உரிய அனுமதியின்றி பட்டாசுகளைப் பதுக்கியவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், திருத்தங்கல் பேட்டைத் தெருவில் ஒரு கட்டடத்தில் உரிய அனுமதியின்றி பட்டாசு பதுக்கிவைக்கப்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில் போலீஸாா் அந்தப் பகுதியில் சோதனை செய்தனா்.
அப்போது, திருத்தங்கல் சரஸ்வதிநகரில் துரைப்பாண்டி (43) ஒரு கட்டடத்தை வாடகைக்கு எடுத்து, அதில் பட்டாசுகளைப் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.
Advertisement
Advertisement
இதுகுறித்து திருத்தங்கல் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்தனா். மேலும், அங்கு பதுக்கியிருந்த பட்டாசு பண்டல்களையும் பறிமுதல் செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.