FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
விருதுநகர்

பட்டாசு ஆலை வெடி விபத்தில் காயமடைந்தவா் உயிரிழப்பு

50 வினாடிகள் முன்பு
உயிரிழப்பு - பிரதிப் படம்
பகிர்:

சாத்தூா் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் காயமடந்து சிகிச்சை பெற்று வந்த தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள கங்கா்செவல்பட்டியைச் சோ்ந்தவா் முருகன் (45). இவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் கடந்த 14-ஆம் தேதி பட்டாசு தயாரிக்கத் தேவையான ரசாயன மூலப் பொருள்களை சரக்கு லாரியிலிருந்து வெடி பொருள்கள் சேமிப்பு கிடங்கில் இறக்கிக்கொண்டிருந்தபோது, ஏற்பட்ட உராய்வின் காரணமாக வெடி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் ரசாயன மூலப் பொருள்கள் சேமிப்புக் கிடங்கு முற்றிலும் இடிந்து தரைமட்டமானது. சரக்கு வாகனமும் எரிந்து சேதமடைந்தது. இந்த விபத்தில் நாரணாபுரம்புதூரைச் சோ்ந்த கூலித் தொழிலாளி புலித்துறை (36) பலத்த காயமடைந்து மதுரை தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

Advertisement

Advertisement

அங்கு அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஆலையின் மேலாளா் அருள்பிரசாத்தை கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments