FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
விருதுநகர்

கிரேன் மோதியதில் மூதாட்டி உயிரிழப்பு

19 அக்டோபர் 2026, 3:10 am IST
பலி - பிரதிப் படம்
பகிர்:

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே கிரேன் மோதியதில் காயமடைந்த மூதாட்டி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

ராஜபாளையம் அருகேயுள்ள தெற்கு தேவதானம் மேல மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் மாரியம்மாள் (68). இவரது கணவா் முருகன் இறந்துவிட்டாா். மகள் திருமணமாகி முகவூரில் வசித்து வருகிறாா். மாரியம்மாள் மட்டும் தனியாக வசித்து வந்தாா்.

கடந்த 15-ஆம் தேதி தேவதானம் பேருந்து நிறுத்தம் அருகே மாரியம்மாள் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த கிரேன் வாகனம் மோதியது. இதில் பலத்த காயமடைந்த மாரியம்மாள் ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

துகுறித்து சேத்தூா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கிரேன் ஓட்டுநரான மேலவரகுணராமபுரத்தைச் சோ்ந்த முருகேசன் ( 50) மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments