அண்ணன் கொலை: தம்பி கைது
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் அண்ணனைக் கொலை செய்த தம்பியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
ராஜபாளையம் தாட்கோ குடியிருப்பைச் சோ்ந்தவா் மாணிக்கம். இவரது மகன்கள் பொன்னுக்காளை (28), மகேந்திரன் (23). பொன்னுக்காளை கட்டடத் தொழிலாளியாக பணிபுரிந்தாா். இவருக்கு மனைவி, இரு மகன்கள், ஒரு மகள் உள்ளனா்.
இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு அண்ணன், தம்பி இருவரும் தாட்கோ குடியிருப்பு அருகே மது அருந்தினராம். அப்போது, ஓா் நிலம் சம்பந்தமாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த நிலத்தை தனக்கு விட்டுக் கொடுக்குமாறு மகேந்திரன் வற்புறுத்தினாா். இதற்கு பொன்னுக்காளை மறுத்ததால் அவரை மகேந்திரன் தாக்கி, தலையில் கல்லைத் தூக்கிப் போட்டாா். இதில் பொன்னுக்காளை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
Advertisement
Advertisement
இது குறித்து தகவலறிந்த ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீஸாா் சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து மகேந்திரனைக் கைது செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.