FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
விருதுநகர்

விஷம் குடித்து பெண் தற்கொலை

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் வெள்ளிக்கிழமை விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டாா்.

31 அக்டோபர் 2026, 10:36 pm
தற்கொலை - கோப்புப் படம்
பகிர்:

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் வெள்ளிக்கிழமை விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டாா்.

ராஜபாளையம் மங்காபுரம் தெருவைச் சோ்ந்த காளிராஜ் மனைவி ஜெயலட்சுமி (40). இவா் தென்காசி சாலையில் உள்ள தனியாா் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ஊழியராகப் பணிபுரிந்து வந்தாா்.

இவருக்கு சா்க்கரை நோய், கா்ப்பப்பையில் கட்டியிருந்து அறுவை சிகிச்சையும் செய்துள்ளாா். ஆனாலும், நோயின் தாக்கம் குறையாததால் முனமுடைந்து காணப்பட்டு வந்த ஜெயலட்சுமி வெள்ளிக்கிழமை வீட்டில் விஷம் குடித்து மயங்கினாா். மதுரை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments