மக்கள்தொகைக் கணக்கெடுப்பு! இணையத்தில் நாமே பதிவிடலாம்! 33 கேள்விகள் என்னென்ன?
மக்கள் தொகை கணக்கெடுப்பு தொட 33 கேள்விகள் என்னென்ன என்பது குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.
வீட்டுப் பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பை ஆக.1 முதல் ஆக. 30 வரை தமிழகத்தில் நடத்தவுள்ளது. அதற்கு முன்னதாக, மக்களே சுயமாக தங்கள் விவரங்களை இணையம் மூலம் முன்பதிவு செய்யும் வசதி தொடங்கியிருக்கிறது. தமிழக முதல்வர் ஜோசப் விஜய், தன்னுடைய விவரங்களைப் பதிவு செய்து அது குறித்த விடியோவையும் வெளியிட்டுள்ளார்.
வரும் 2027 -ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பை முன்னிட்டு, இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையம் வீட்டுப் பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு தமிழகத்தில் நடத்தவுள்ளது.
அதற்கு முன்னதாக, மக்களே இணையதளத்தில் தாமாக தங்களது விவரங்களைப் பதிவு செய்யும் வாய்ப்பு இன்று தொடங்கப்பட்டுள்ளது. இந்த வீட்டுப் பட்டியல் மற்றும் வீடுகளின் கணக்கெடுப்பில் 33 கேள்விகள் கேட்கப்படும்.
Advertisement
Advertisement
இதற்கான பிரத்யேக இணையதளமான se.census.gov.in/-ல் சென்றும் பதிவிடலாம். செயலி வாயிலாகவும் பதிவிடலாம். இந்த செயலியில், மாநிலத்தைத் தெரிவு செய்து குடும்பத் தலைவர் பெயர், செல்போன் எண் கொடுத்து உள்ளே செல்லலாம். மின்னஞ்சல் முகவரி இருந்தால் கொடுக்கலாம். அது வாய்ப்புதான்.
இதில் வீடுகளின் நிலை, குடிநீா், மின்சாரம், இணைய வசதி, சமையல் எரிபொருள், கழிப்பிடம், கணினி போன்ற வசதிகளும், வீட்டின் உரிமை, குடும்ப உறுப்பினா் எண்ணிக்கை, உள்கொள்ளும் உணவு, வாகனங்கள், கைப்பேசி உள்ளிட்ட விவரங்கள் கேட்கப்படும்.
பெரும்பாலான கேள்விகளுடன் மூன்று பதில்கள் இடம்பெற்றுள்ளன. அதில் ஒன்றை தெரிவு செய்யும் வகையில் அமைந்துள்ளது.
1. அடுக்கு மாடிக் கட்டடத்தின் எண்?
2. வீட்டுக் கதவு எண்?
3. வீட்டின் தரையின் முக்கிய பொருள் எதில் கட்டப்பட்டது?
4. வீட்டின் சுவர் எதில் கட்டப்பட்டது?
5. வீட்டின் மேல் கூரை எந்தப் பொருளால் உருவாக்கப்பட்டது?
6. வீடு தற்போது பயன்பாட்டில் உள்ளதா?
7. எந்த மாதிரி வீட்டின் அமைப்பு?
8. குடும்ப எண்? (குடும்ப அட்டை எண்)
9. வீட்டில் வசிக்கும் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை
10. வீட்டுத் தலைவரின் பெயர்?
11. வீட்டுத் தலைவரின் பாலினம்?
12. குடும்பத் தலைவர் எந்த சாதி?
13. வீட்டின் உரிமை நிலை என்ன?
14. வீட்டில் உள்ள குடியிருப்பு அறைகளின் எண்ணிக்கை?
15. வீட்டில் வசிக்கும் திருமணமான தம்பதிகளின் எண்ணிக்கை?
16. குடிநீரின் முக்கிய ஆதாரம்?
17. குடிநீர் வசதி எப்படி கிடைக்கிறது?
18. மின்சார வசதி உள்ளதா?
19. கழிப்பறை வசதி உள்ளதா?
20. எந்த வகையான கழிப்பறை?
21. கழிவுநீர் வெளியேறும் வசதி?
22. குளியல் வசதி இருக்கிறதா?
23. சமையலறை மற்றும் எல்பிஜி / பிஎனஜி இணைப்பு உள்ளதா?
24. சமையலுக்குப் பயன்படுத்தப்படும் முக்கிய எரிபொருள்?
25. வானொலி, டிரான்சிஸ்டர் வசதி இருக்கிறதா?
26. தொலைக்காட்சி இருக்கிறதா?
27. இணைய வசதி இருக்கிறதா?
28. மடிக்கணினி, கம்ப்யூட்டர் இருக்கிறதா?
29. தொலைபேசி, செல்போன் இருக்கிறதா?
30. சைக்கிள் உள்ளிட்ட வாகனங்கள் இருக்கிறதா?
31. கார், ஜீப், வேன் இருக்கிறதா?
32. வீட்டில் சாப்பிடும் முக்கிய உணவு என்ன?
33. உங்கள் செல்போன் எண்? உள்ளிட்ட கேள்விகள் கேட்கப்படும்.
இவற்றுக்கு உரிய பதில்களும் விடைகளுடன் அளிக்கப்பட்டிருக்கும். அவற்றில் சரியானதை தெரிவு செய்து பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Census! We can enter the details online ourselves! What are the 33 questions?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.