முகப்பு

நிலவு தோன்றி மறையும் அழகிய விடியோ பகிர்ந்தார் இந்திய வம்சாவளி நாசா விஞ்ஞானி!!

நிலவு தோன்றி மறையும் அழகிய விடியோவை இந்திய வம்சாவளி நாசா விஞ்ஞானி பகிர்ந்துள்ளது பற்றி..

நிலவு தோன்றி மறையும் அழகிய விடியோ பகிர்ந்தார் இந்திய வம்சாவளி நாசா விஞ்ஞானி!!
பகிர்:

விண்வெளியில் எடுக்கப்படும் அரிதான விடியோக்களை தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டு, மக்களுக்கு பல்வேறு தகவல்களை அளித்து வரும் அனில் மேனன் என்ற இந்திய வம்சாவளி நாசா விஞ்ஞானி தற்போது பகிர்ந்த விடியோ வைரலாகியிருக்கிறது.

சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து, நிலவு தோன்றுவதும், மறைவதும் பதிவான விடியோ வெளியிடப்பட்டுள்ளது. பொதுவாக பூமியிலிருந்து நாம் பார்க்கும் காட்சியை, இந்த விடியோ, விண்வெளியிலிருந்து பதிவு செய்திருக்கிறது. பின்னணியில் இருப்பது பூமியின் நீல நிறம்.

விடைபெறும் நிலவு, வணக்கம் நிலவு என்று பொருள்படும் வகையில் ஆங்கில வார்த்தைகளை இணைத்து இரண்டு விடியோக்களை ஒன்றாக பகிர்ந்துள்ளார். அதில், நிலவு தோன்றுவதும், படிப்படியாக வானிலிருந்து மறைவதும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

பொதுவாக சூரிய உதயங்களைத்தான் மக்கள் அதிகம் ரசித்துப் பார்த்திருப்பார்கள். இங்கே நிலவு தோன்றி மறைகிறது. அற்புதமாக விடியோவை ஏராளமானாரோர் பார்த்து கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.

summary

An Indian-origin NASA scientist shared a beautiful video of the moon appearing and disappearing!!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.