கனடாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இருவர் சுட்டுக்கொலை
கனடாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இருவர் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து....

கனடாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள சர்ரே நகரில், வால்மார்ட் கடைக்கு வெளியே நடந்த துப்பாக்கிச் சூட்டில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டனர். இது ஒரு திட்டமிடப்பட்ட தாக்குதல் என்று உள்ளூர் ஊடகச் செய்திகள் தெரிவித்துள்ளன.
நவம்பர் 15-ம் தேதி இரவு நடந்த இந்தச் சம்பவத்தில், ககன்ப்ரீத் (கேரி) ரெஹால் (23) மற்றும் சுக்ப்ரீத் கவுர் (24) ஆகியோர் பலியானதாக ஒருங்கிணைந்த கொலை விசாரணைக் குழு தெரிவித்துள்ளது. துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த இவர்கள் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியாகினர்.
Advertisement
Advertisement
பலியான இருவரும் அருகிலுள்ள டெல்டா நகரில் வசித்து வந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்தனர். ரெஹால் மீது ஏற்கெனவே ஆயுதங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் இருந்ததாகவும், அதே சமயம் கவுருக்குக் கனடாவில் மிகக் குறைவான நபர்களுடனேயே தொடர்பு இருந்ததாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இரவு 10.51 மணியளவில் அருகிலுள்ள பகுதியில் கார் ஒன்று தீப்பிடித்து எரிந்ததாகப் பதிவான சம்பவத்திற்கும், இந்தத் துப்பாக்கிச் சூட்டிற்கும் தொடர்பு இருப்பதாகக் காவல்துறையினர் நம்புகின்றனர் என ஒருங்கிணைந்த கொலை விசாரணைக் குழுவின் செய்தித் தொடர்பாளர் கூறியதாக சிபிசி நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
எரிந்த நிலையில் காணப்பட்ட அந்த வாகனம், சந்தேக நபர்கள் பயன்படுத்திய வாகனமாக இருக்கலாம் என நம்பப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.