FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஓபன் ஏஐ கொண்டு வந்திருக்கும் டாட்ஸ்! நமக்கே நமக்காக ஒரு உதவியாளர்!

ஓபன் ஏஐ கொண்டு வந்திருக்கும் டாட்ஸ், நமக்கே நமக்காக ஒரு உதவியாளர் பற்றி...

ஓபன் ஏஐ
பகிர்:

செய்யறிவிடம் நாம் கொடுத்த வேலையை நமக்காக ஒருவர் கண்காணித்துக் கொண்டிருந்தால் எப்படியிருக்கும்? நமக்கே நமக்காக ஒரு உதவியாளர் வைத்துக் கொள்வது போல, ஓபன் ஏஐ கொண்டு வந்திருப்பதுதான் டாட்ஸ்.

அதாவது சாட் ஜிபிடியை அறிமுகப்படுத்திய ஓபன் ஏஐ நிறுவனம், தற்போது டாட்ஸ் என்ற புதிய ஏஐ உதவியாளரை அறிமுகப்படுத்துகிறது.

இதன் பெயர்தான் டாட்ஸ். ஆனால், இதன் வேலையோ அபராமானதாம். தனியாக கணினியோ, இணையத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட கணிகளிலோ எண்ணற்ற செயலிகளுடன் இணைந்து இந்த டாட்ஸ் பணியாற்றும் என்பதால், பயன்படுத்தவும் எளிது.

Advertisement

Advertisement

'Dots' என்பவை எதையும் கையாளக்கூடிய, எப்போதும் இயங்கிக்கொண்டிருக்கும் திறன்மிக்க உதவியாளராக இருக்கும்.

இவை செய்யறிவுடன் (AI) செயல்படுவதற்கான ஒரு முற்றிலும் புதிய அணுகுமுறையை வழங்குகின்றன; பயன்படுத்தும் ஒருவருக்கு முக்கியமானவை எவை என்பதைப் புரிந்துகொண்டு, அதற்கேற்ப செயல்பட்டு, முக்கியமான பணிகளைத் தாங்களே பொறுப்பு ஏற்றுக்கொள்வதன் மூலம், பயனரின் நேரத்தையும் கவனத்தையும் குறைக்கிறது. இதனால் பயனர் மற்ற பணிகளில் கவனம் செலுத்த கூடுதல் நேரம் கிடைக்கும் என்று டாட்ஸ் அறிமுக உரை கூறுகிறது.

ஒரு பயனர், தனக்கான டாட்ஸ் உருவாக்கி, பணிக்குத் தேவையான செயலிகளை இணைத்து, அதில் பயன்படுத்தும் டூல்களுக்கு மட்டும் அனுமதி கொடுத்துவிட்டால் அது பல்வேறு பணிகளையும் கவனித்துக் கொள்ளும்.

ஆனால், தன்னிச்சையாக எதையும் செய்யாது, பயனரின் அனுமதி பெற்றோ அல்லது அவர் கொடுத்த வேலையையோதான் டாட்ஸ் செய்யும் என்கிறது ஓபன் ஏஐ.

தற்போது புரோ மற்றும் பிசினஸ் ப்ரீமியம் பயனர்களுக்கு இந்த டாட்ஸ் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. ஸ்பெஷலிஸ்ட் டாட்ஸ் சோதனையில் உள்ளது.

summary

Dots from OpenAI an assistant designed just for us

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments