FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

22 அணுகுண்டுகளுக்கு நிகரான பென்னு விண்கல்! பூமியை தாக்கப்போவது எப்போது?

22 அணுகுண்டுகளுக்கு நிகரான பூமியை நோக்கி வரும் விண்கல் பற்றி...

8 அக்டோபர் 2026, 4:29 pm IST
பூமியை நோக்கி வரும் விண்கல் - ani
பகிர்:

22 அணுகுண்டுகளுக்கு நிகரான விண்கல் ஒன்று பூமியை நோக்கி வந்து கொண்டிருப்பதாகவும், அது பூமியை எந்த தேதியில் தாக்கலாம் என்பது குறித்து துல்லியமான தேதியை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஒவ்வொரு முறையும் பூமியை நோக்கி ஏராளமான விண்கற்கள் வந்துகொண்டுதானிருக்கின்றன.

அதன் அபாயம் குறித்து விஞ்ஞானிகள் எச்சரித்துக் கொண்டிருந்தாலும் நல்வாய்ப்பாக அவை பூமியை மிக நெருக்கமாக உரசிச் சென்றுவிடுகின்றன.

Advertisement

Advertisement

ஆனால், 22 அணு குண்டுகளுக்கு இணையான ஆற்றலைக் கொண்ட ஒரு சிறுகோள் அல்லது விண்கல், பூமியை நோக்கி வருகிறது. 'பென்னு' (Bennu) என்று பெயரிடப்பட்ட இந்த விண்கல், ஒவ்வொரு ஆறு ஆண்டுகளுக்கும் ஒருமுறை நமது பூமியை நெருங்கி வருகிறது.

இருப்பினும், 2182-ஆம் ஆண்டு செப்டம்பர் 24-ஆம் தேதியன்று பூமியை அந்த விண்கல் தாக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

இந்த விண்கல் எப்படிப்பட்டது என்பது குறித்தும், இது பூமியை தாக்காமல் இருக்கும் வழிகளைக் கண்டறியும் ஆய்விலும் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.

ஆண்டு முழுக்க சிறு விண்கற்கள் பூமி மீது விழுந்துகொண்டுதானிருக்கின்றன. சில விண்கற்கள் பேரழிவை ஏற்படுத்தும் வல்லமையை பெற்றிருக்கும். அதுபோன்றவற்றின் பாதைகளை மாற்றும் வழிகளையும் விண்வெளி ஆய்வு நிறுவனங்கள் மேற்கொள்வது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments