பூமியைத் தாக்கிய சூரிய காந்த புயல்! என்ன நடந்தது?
சூரியனில் உண்டான காந்த புயல், பூமியைத் தாக்கியிருப்பது பற்றி..
அக்.7-8 ஆம் தேதிகளில் சூரியனில் நேரிட்ட காந்தப் புயல், பூமியை மிக வேகமாகத் தாக்கியதில் பல இடங்களில் பாதிப்புகள் உணரப்பட்டுள்ளன.
உலகின் சில பகுதிகளில் ரேடியோ சிக்னல்கள் சிறிதுநேரம் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
சூரியனில் சன்ஸ்பாட் 4549 பகுதியில் அக்டோபர் 7ஆம் தேதி நேரிட்ட சூரிய காந்த புயல், 10ஆம் தேதி பூமியை தாக்கிய நிலையில், 8ஆம் தேதி உருவான இரண்டாவது காந்த புயல் நேற்று பூமியை தாக்கியிருக்கிறது.
Advertisement
Advertisement
7ஆம் தேதி உருவான சூரிய காந்த புயலைவிடவும், 8ஆம் தேதி உருவான காந்த புயல் பூமியை மிக விரைவாக வந்தடைந்ததாகவும் இதன் காரணமாக வட அமெரிக்க, ஐரோப்பிய பகுதிகளில் வானில் அரோரா எனப்படும் துருவ ஒளி தோன்றியதாகவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
இதனை இந்தியாவிலிருந்து பார்க்க முடியவில்லை. எந்தப் பகுதியில் விழும், நேரம் போன்றவற்றை பொருத்தே இதனைப் பார்க்க முடியும் என்று கூறப்பட்டது.
அரோரா பூமியை வந்தடைந்தபோது செயற்கைக்கோள் தொடர்புகள், மின் விநியோக கட்டமைப்புகளும் லேசான பாதிப்புக்கு உள்பட்டதாகவும் கூறப்படுகிறது.
சூரியனிலிருந்து 900 கி.மீ. வேகத்தில் இந்த சூரிய காந்த புயல் பூமி மீது மோதியதாகவும் எனினும் பூமிக்கு இதனால் பெரிய பாதிப்புகள் ஏதுவும் நேரிடவில்லை என்றாலும் தொடர்ந்து கண்காணிப்பில் விஞ்ஞானிகள் உள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.