FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

தரவுகள் திருட்டு! எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளரா? அடுத்த 6 மாதங்களுக்கு கவனம்!

தரவுகள் திருடப்பட்டிருக்கும் நிலையில் எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள், அடுத்த 6 மாதங்களுக்கு கவனமுடன் செயல்பட வேண்டும்

எஸ்பிஐ வங்கி
பகிர்:

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா எனப்படும் எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களின் தரவுகள் திருடப்பட்டு தற்போது டார்க் வெப் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இதனால், பல லட்சம் எஸ்பிஐ வாடிக்கையாளர்களின் விவரங்களை டார்க் வெப் மூலம் யார் வேண்டுமானாலும் பெற முடியும் என்ற அபாயம் ஏற்பட்டுள்ளது.

இணையத் தாக்குதல் நடந்திருப்பது உண்மைதான் என்று கூறியிருக்கும் எஸ்பிஐ, வங்கி சேவையில் எவ்வித பாதிப்பும் இருக்காது என்றும் விளக்கம் கொடுத்துள்ளது.

Advertisement

Advertisement

ஆனால், அபாயம் எங்கே ஆரம்பிக்கும் என்றால்.. சைபர் மோசடியாளர்களின் அடுத்த இலக்கு எஸ்பிஐ வாடிக்கையாளர்களாக இருக்கலாம்.

அடுத்து என்னவாகும்?

தரவுகள் திருடப்பட்டதால் உடனடியாக வங்கிக் கணக்கில் இருக்கும் வாடிக்கையாளர் பணம் திருடப்பட்டுவிடும் என்பது அர்த்தமல்ல, பொதுவாக வங்கியின் தரவுகளைத் திருடுவோர், வங்கியிடமிருந்து ஒரு குறிப்பிட்டத் தொகையை கேட்டு மிரட்டுவார்கள். ஆனால், இங்கு தரவுகள் வெளிப்படையாக கசியவிடப்பட்டுவிட்டது. இது இன்னமும் அபாயத்துக்குரியது.

அடுத்த 6 மாதங்களுக்கு...

எஸ்பிஐ வாடிக்கையாளர்களின் பெயர், வங்கிக் கணக்கு விவரம், கடன் விண்ணப்பம், பிறந்த தேதி உள்ளிட்ட அனைத்தும் வெளியே கசிந்துவிட்டது. குறைந்தபட்சம் இனி அடுத்த 6 மாதங்களுக்கு எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

வங்கியிலிருந்து அழைக்கிறோம் என்று கூறி அனைத்துத் தகவல்களையும் மிகச் சரியாக சொன்னாலும் அவர்கள் வங்கியிலிருந்துதான் பேசுகிறார்கள் என்பதை உறுதி செய்ய வேண்டாம்.

கடன் கேட்டு விண்ணப்பித்திருந்தால், அவர்கள் நிச்சயம் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் செய்ய வேண்டியது என்ன?

எஸ்பிஐ வங்கியின் பாஸ்வோர்டை மாற்றி, புதிய கடினமான பாஸ்வேர்டை அமைத்துக் கொள்ளலாம்.

எஸ்பிஐ வங்கியிலிருந்து அழைக்கிறோம் என்று யார், என்ன சொன்னாலும் நம்பி ஓடிபி என எந்த தகவலையும் பகிர வேண்டாம்... (அதான் பகிர்ந்துவிட்டார்களே என்கிறீர்களா?)

அடுத்த ஒரு சில வாரங்களுக்கு அவ்வப்போது வங்கிக் கணக்குகளை சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

வங்கியின் உண்மையான வாடிக்கையாளர் எண்ணை பதிவு செய்து கொள்ளுங்கள். வங்கிக் கணக்கில் ஏதேனும் பிரச்னை என்றால் உடனடியாக வங்கியை தொடர்பு கொள்ளுங்கள்.

என்ன நடந்தது?

சிரியூசிம் என்ற அடையாளம் தெரியாத ஹேக்கர் குழு, எஸ்பிஐ வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட விவரங்கள், கடன் விண்ணப்பங்கள், கணக்குத் தொடங்க வங்கியில் கொடுத்த ஆவணங்கள் உள்ளிட்ட அனைத்து ரகசியம் காக்கப்பட வேண்டிய தகவல்களையும் திருடி டார்க் வெப் தளத்தில் வெளியிட்டுவிட்டது.

இவ்வாறு, ஒன்றல்ல, இரண்டல்ல, எஸ்பிஐ-யின் 3.80 லட்சம் வாடிக்கையாளர்களின் தரவுகள் திருடப்பட்டு பகிரப்பட்டுள்ளன.

தங்களது வாடிக்கையாளர் தரவுகள் அக்.16-ஆம் தேதி திருடப்பட்டு டார்க் வெப்பில் கசியவிடப்பட்டிருக்கும் தகவல், பாதுகாப்பு சைபர் ஏஜென்சி மற்றும் இந்திய கணினி அவசரகால கட்டுப்பாட்டுக் குழு ஆகியவற்றிடமிருந்து வங்கி பெற்றிருப்பதாக எஸ்பிஐ வங்கி கூறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments