முகப்பு

எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்ட் வசமாகும் சவுத் இந்தியன் வங்கியின் 9.99% பங்குகள்? ரிசர்வ் வங்கி ஒப்புதல்!!

சவுத் இந்தியன் வங்கியின் 9.99% பங்குகளை கையகப்படுத்த எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் முன்வைத்துள்ள திட்டத்திற்கு ரிசர்வ் வங்கி ஒப்புதல்.

24 நவம்பர் 2026, 4:24 pm
எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்ட் வசமாகும் சவுத் இந்தியன் வங்கியின் 9.99% பங்குகள்? ரிசர்வ் வங்கி ஒப்புதல்!!
சவுத் இந்தியன் வங்கி
பகிர்:

புதுதில்லி: தனியார் துறை வங்கியான சவுத் இந்தியன் வங்கியின் 9.99% பங்குகளை கையகப்படுத்த எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் முன்வைத்துள்ள திட்டத்திற்கு ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. அதே வேளையில், இந்த ஒப்புதல் நவம்பர் 23ஆம் தேதியன்று வங்கிக்கு தெரிவிக்கப்பட்டது.

வங்கியின் பங்கு மூலதனம் சுமார் 9.99% வரை கையகப்படுத்துவதற்கு, அதில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு உட்பட்டு, எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்டிற்கு ரிசர்வ் வங்கி ஒப்புதலை வழங்கியுள்ளதாக சவுத் இந்தியன் வங்கி தெரிவித்துள்ளது.

நிதியாண்டின் 2 வது காலாண்டில் சவுத் இந்தியன் வங்கியின் நிகர லாபம், கடந்த ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடுகையில் 21 சதவீதம் அதிகரித்து ரூ.426 கோடியாக உயர்ந்துள்ளது.

Advertisement

Advertisement

summary

RBI has approved an SBI Mutual Fund's proposal to acquire up to a 9.99 per cent stake in South Indian Bank.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.