FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஓர் உத்தமர்!

காமெ கௌடாவிற்கு 82 வயதாகிறது. நிறைய படித்தவர்களும், அதிகாரிகளும் செய்யாத சாதனையை இவர் செய்திருக்கிறார்

30 ஜனவரி 2024, 9:56 pm
பகிர்:

காமெ கௌடாவிற்கு 82 வயதாகிறது. நிறைய படித்தவர்களும், அதிகாரிகளும் செய்யாத சாதனையை இவர் செய்திருக்கிறார். கர்நாடகாவில் உள்ள மாண்டியா மாவட்டத்தில் உள்ள மாலவல்லி தாலுக்காவில் தாசன தொட்டி என்ற கிராமத்தில் காமெ கௌடா வசிக்கிறார்.
 நாற்பது ஆண்டுகளாக முயற்சி செய்து கௌடா பதினான்கு நீர் நிலைகளை (குளம், குட்டை போன்றவற்றைச் சீராக்கி இருக்கிறார்). கடுமையான வெய்யிலில் அக்கம் பக்கத்து ஊரே எரிந்து கொண்டிருக்கும் போது, இந்த நீர்நிலைகளில் தண்ணீர் நிரம்பி வழிகிறது.
 நாற்பதாண்டுகளுக்கு முன் காமெகௌடா தமது ஆடுகளை அழைத்துக் கொண்டு அருகிலிருக்கும் குண்டினி பெட்டா என்ற மலைப்பகுதிக்குப் போனார். மழை இல்லாமல், மலையே கருகி இருந்தது. மழை பெய்தால் மலையிலிருந்து தண்ணீர் கீழே இறங்கி ஓடிவிடுகிறது.
 ஏன், இந்த தண்ணீரைச் சேகரித்து வைக்கக் கூடாது? என்று கௌடா நினைத்ததால், பதினான்கு நீர்நிலைகள் உருவாயின. இதுவரை பத்து பதினைந்து லட்சம் ரூபாய் இதற்காக செலவு செய்திருக்கிறார். பல நல்லவர்கள் கௌடாவுக்கு உதவி செய்துள்ளனர்.
 அண்மையில் காமெகௌடாவிற்கு கண் ஆபரேஷன் நடந்தது. கண்ணைத் திறந்து கொண்டு வெளியில் போனால், கண் தெரியாமல் போய்விடும் என்று மருத்துவர் எச்சரித்தார். ""குடிகாரனைக் குடிக்க வேண்டாம் என்று சொன்னால், சும்மா இருப்பானா? அதுபோலத்தான் நானும். என் நிலத்தின் ஒவ்வொரு துளியும் எனக்குத் தெரியும். நான், அங்கே போகாமல் இருப்பேனா?'' என்று கௌடா வயல் வெளிக்குக் கண்ணில் கட்டுடன் போய்விட்டார்.
 "பஸவஸ்ரீ' என்ற பட்டம் பெற்றுள்ள காமெகௌடா ஓர் உத்தமர் அல்லவா?
 - சண்முகசுந்தரம், சேலம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments