FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பிட்ஸ்...

அமெரிக்க முன்னாள் குடியரசுத் தலைவர் கிளிண்டனைத் தொடர்ந்து மகள் செல்சியாவும், SHE PERISTED AROUND THE WORLD என்று ஒரு புத்தகத்தை எழுதுகிறார். இதனை பென்குயின் புத்தக நிறுவனம் வெளியிடுகிறது.

30 ஜனவரி 2024, 9:56 pm
பகிர்:

• அமெரிக்க முன்னாள் குடியரசுத் தலைவர் கிளிண்டனைத் தொடர்ந்து மகள் செல்சியாவும், SHE PERISTED AROUND THE WORLD என்று ஒரு புத்தகத்தை எழுதுகிறார். இதனை பென்குயின் புத்தக நிறுவனம் வெளியிடுகிறது. இதில் மிகப் பிரபலமான 13 பெண்களின் வாழ்க்கையை தொகுத்து வெளியிடுகிறார். இதில் ஹாரி பாட்டர் எழுத்தாளர் ஜே.கே. ரவுலிங் மற்றும் இந்திய டாக்டர் மேரி வர்கீஸ் பற்றியும் எழுதியள்ளாராம்.

• டில்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் டெபுடி சீஃப் ஆக பணிபுரிபவர் மேரி கார்ல்சன். ஐ.நாவில் அமெரிக்க தூதராக பணிபுரியும் நிக்கி ஹாலி சமீபத்தில் இந்தியா வந்திருந்தார். அவருடைய நிகழ்ச்சியில் மேரி கார்ல்சனும் கலந்து கொண்டார். அங்கு அவரே முக்கிய விருந்தாளியாகிவிட்டார். காரணம் காஞ்சிபுரம் பட்டுப் புடவையை அணிந்து வந்திருந்ததுதான். டூவிட்டரில் எந்த உடை அணிந்தால் சிறப்பாக இருக்கும் என ஆலோசனை கேட்டிருந்தார். பலரும் காஞ்சிபுரம் பட்டுப் புடவையை சிபாரிசு செய்திருந்தனர் என்பது கூடுதல் தகவல்.
- ராஜிராதா

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments