முகப்பு
தினமணி கதிர்

கவனம் ஈர்த்த ஹாலிவுட் சினிமாக்கள் !

ஆண்டுக்கு நூறு படங்கள்வந்தாலும், ரசிகர்கள்மனதில் 'நச்'சென ஒட்டிக்கொள்ளும் படங்களுக்கு ஆயுள் அதிகம். அப்படி சமீப ஆண்டுகளில் ஹாலிவுட்டை கலக்கிய பல படங்களின் சின்னட்ரெய்லர் இது.

Updated On : 19 நவம்பர் 2023, 12:00 am IST
பகிர்:

ஆண்டுக்கு நூறு படங்கள்வந்தாலும், ரசிகர்கள்மனதில் 'நச்'சென ஒட்டிக்கொள்ளும் படங்களுக்கு ஆயுள் அதிகம். அப்படி சமீப ஆண்டுகளில் ஹாலிவுட்டை கலக்கிய பல படங்களின் சின்னட்ரெய்லர் இது.

லோகன்

எக்ஸ்மேனுக்கான ஃபேர்வெல் இந்த 'லோகன்'. முந்தைய படங்களில் அடிதடியும், ஆக்ரோஷமுமாக மிரட்டிய லோகனை இந்தப் பாகத்தில் மிக உணர்வுப்பூர்வமாக மாற்றி இருந்தனர். தன்னுடைய தந்தையாக நினைத்தவரை பாதுகாக்கவும், திடீரென கண்டடையும் தன் மகளைக் காப்பாற்றவும் லோகன் போராடுவதாக விரிகிற கதை.

Advertisement

Advertisement

ஒரு சூப்பர் ஹீரோவின் வயோதிகத்தைக் காட்டிய விதத்தில் வித்தியாசமாய் தெரிந்தது. பிரமிப்பாகப் பார்க்க வேண்டிய ரசிகர்கள், கண்ணீர் வழிய எக்ஸ்மேனுக்கு விடை கொடுத்த விதத்தில் லோகன் கண்டிப்பாக பார்க்க வேண்டிய சினிமா.

டன்கிர்க்

படம் வெளியானதும், இதுதான் நோலனின் சிறந்த படமா?, இல்லையா? என்ற வாக்குவாதம் தீப்பற்றி எரிந்தது. இந்தக் கட்டுரையின் நோக்கம் அதை விவாதிப்பது இல்லை என்பதால் அப்படியே திரும்பி படத்துக்குள் போவோம். அதிக முறை சினிமாவாக்கப்பட்ட ஒரு வரலாற்று நிகழ்வை எடுத்து படமாக்கியிருந்தார் க்ரிஸ்டஃபர் நோலன். திரைக்கதை ஜித்து என்பதால் நீர், நிலம், ஆகாயம் என மூன்றாகப் பிரித்து கதை சொல்லி சுவாரஸ்யப்படுத்தியிருந்தார் நோலன்.

ஒரு வரலாற்று நிகழ்வை, த்ரில்லிங்காகவும், உண்மைக்கு நெருக்கமாகவும் கொடுத்திருந்தவிதத்தில் டன்கிர்க் படத்தை தவிர்க்க முடியாது.

பேபி டிரைவர்

காதல் படங்கள்தான் இசையைத் தழுவியப் படமாக வரும் என்பதை காரை விட்டு மோதி பொடிப் பொடி ஆக்கினான் இந்த 'பேபி டிரைவர்'. படத்தில் முழுக்க, முழுக்கப் பாடல்கள் மட்டும்தான். ஆக்ஷன் படங்களில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்கர்விருதுகளைக் குவித்த 'மேட்மேக்ஸ்' ஒரு ரகம் என்றால், 'பேபி டிரைவர்' இன்னொரு ரகம்.

கச்சிதமான கார் ஓட்டுநர், அவனுக்கு தேவையான இசை, அவனுக்குப் பிடித்த பெண், அவன் விசுவாசமாக இருக்கும் ஒருவர், அவருக்காக செய்யும் வேலையால் வரும் பிரச்னை.. என தோட்டா தெறிக்க தெறிக்க ஒரு மியூசிகலாக அதிரடித்தது படம்.

வொண்டர் வுமன்

இதற்கு முன்பு வந்த, சூப்பர்கேர்ள், கேட்வுமன், பேட்கேர்ள் என எந்த சூப்பர் ஹீரோயின் சினிமாவும் இத்தனை பெரிய ஆதரவு பெற்றது கிடையாது. கிராஃபிக்ஸ் பூச்சுகளால் படத்தில் கொரளி வித்தை என்ன வேண்டுமானாலும் காட்டலாம். ஆனால், அது படத்தின் உணர்வோடு இணைந்திருந்தால்தான் வேலைக்கே ஆகும் என நிரூபித்தது 'வொண்டர் வுமன்'.

போர் நடந்து கொண்டிருக்கும்போது, தனி ஒருத்தியாக எழுந்து ஸ்லோமோஷனில் நடந்து செல்லும் போது வரும் எதிரியை பந்தாடுவது என தன்னுடைய ஒளிரும் மந்திரக் கயிறால் கட்டிப் போட்டார். டையானாவாய் வந்த கேல் கடாட். எந்த அளவுக்கு என்றால் 'ஜஸ்டிஸ் லீக்' படம் எப்படி இருந்தாலும் கேல் கடாட்டைப் பார்ப்பதற்காகவே படம் பார்க்கும் அளவுக்கு. இதன் இரண்டாம் பாகத்துக்கும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கோகோ

பிக்ஸாரின் பக்கா அனிமேஷன் படம் கோகோ. குழந்தைகளுக்கு மட்டுமில்லாமல், பெரியவர்களுக்கும் பொழுதுபோக்காக இருந்தவிதத்தில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய படம் இது. மெக்ஸிகனில் இசை மீது அதீத வெறுப்பு காட்டும் குடும்பம், அந்தக் குடும்பத்தில் இசை மீது அதீத ஆர்வம் கொண்ட சிறுவன் எப்படி தன் கனவை அடைகிறான் என்பது ஒன்லைன். இதற்குப் பின்னர் லட்சியமா?, குடும்பமா?, இறந்த குடும்பத்தினரை நினைவில் வைத்துக் கொள்வது, வெற்றியாளனின் வெற்றி மட்டுமே இங்கு பார்க்கப்படும், அதற்கு அவன் என்ன செய்தாலும் இந்த உலகம் கண்டு கொள்வது கிடையாது என நிறை விஷயங்களை மிக உணர்வுப் பூர்வமாகவே சினிமாவாக்கப்பட்டிருந்தது.

ஜோம்பிலேண்ட் : டபுள் டேப்

இந்தப் படத்தின் முதல் பாகம் 2009-ஆம் ஆண்டு வெளியானது. ஜோம்பிக்களை வைத்து அதிரடியாக மட்டும் எடுக்காமல் கதையையும் திரைக்கதையும் படு காமெடியாக நகர்த்தியிருப்பார் இயக்குநர் ரூபென் ஃப்லெயிச்சர். அதுதான் இந்தப் படத்தின் ஸ்பெஷல். வூடி ஹாரல்சன், ஜெஸ்ஸி ஈசன்பெர்க், எம்மா ஸ்டோன் போன்ற முன்னணி நடிகர்கள் இந்தப் படத்தில் நடித்திருப்பார்கள். அதே இயக்குநர், அதே நடிகர்கள் என இவர்களது கூட்டணி மீண்டும் இந்த வருடம் இணைந்திருக்கிறது. ஜோம்பி வகை படம் பார்ப்பவர்களுக்கு இது புது அனுபவம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments