FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

சிரி... சிரி...

எதுக்கு போலீஸ் ஸ்டேஷன் உள்ளே மாட்டை ஓட்டின்னு வர்றீங்க?

22 செப்டம்பர் 2024, 3:07 pm
சித்தரிக்கப்பட்டது
பகிர்:

.

எதுக்கு போலீஸ் ஸ்டேஷன் உள்ளே மாட்டை ஓட்டின்னு வர்றீங்க?''

Advertisement

Advertisement

'இங்கே நல்லா லாடம் காட்டுவாங்கன்னு சொன்னாங்க சார்.. அதான்...''

-வி.சாரதி டேச்சு,. சென்னை.



'என்னை போலீஸ் ஸ்டேஷனில் திருடுவியா, திருடுவியான்னு கேட்டு அடிச்சாங்க?''

'அப்புறம்...''

'சரி திருடுவேன்னு சொன்னதுக்கு அப்புறம்தான் விட்டுட்டாங்க?''

-ராஜேஸ்வரி, கல்லிடைக்குறிச்சி.



'செல்போன் திருடனை கண்டுபிடிக்க முடியலையா? ஏன் இன்ஸ்பெக்டர்..''

'ஹி இஸ் நாட் ரீச்சபிள் சார்...''

-எம்.அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி.



'ஏட்டய்யா... என்னோட மொபைல் தொலைஞ்சு போச்சு...''

'புகார் கொடுத்துட்டு கண்டுபிடிக்கிற வரைக்கும் நிம்மதியா இருங்க சார்...''

-எம்.சுப்பையா, கோவை.



'ஏண்டா அந்த ஏடிஎம் மெஷினை உடைச்சே...?''

'எதிர் ஏடிஎம் மெஷினில் நோ கேஷ் போர்டு மாட்டியிருந்துச்சி சார்...''



'பாஸ்.. அவரிடம் திருடின மொபைல ஏன் திருப்பிக் கொடுத்தீங்க?''

'அவர் என் பேஸ்புக் பிரண்டு அதான்...''



'உங்க முதல் படத்தோட கதையை வெச்சே ஏன் திரும்ப, திரும்ப படம் எடுக்கறீங்க?''

'மத்தவங்க கதையைத் திருடினா பிரச்னை

ஆகும்னுதான் சார்...''

-அ.ரியாஸ், சேலம்.

'ஹலோ ஏ1 போலீஸ் ஸ்டேஷன் ஹியர்...''

'ஹலோ போலீஸ் ஸ்டேஷன்னு சொல்லுங்க போதும்... ஏ ஒன்னா... இல்லையான்னு நாங்க முடிவு செய்யறோம்...''



'உங்களைப் புக் பண்ண வந்திருக்கோம்...''

'முதலில் கதையை சொல்லுங்க சார்...''

'ஸ்டேஷனுக்கு வாங்க.. எல்லா கதையும் சொல்றோம்...''



'பூட்டை உடைச்சி ஐந்து லட்சம் ரூபாய் பணத்தைத் திருடினியா?''

'இல்லீங்க எஜமான்... பீரோவை உடைச்சிதான் திருடினேன்...''



'புகார்ன்னா பெட்டியில் போட்டுட்டு போங்க..?''

'சார் நீங்க அந்தப் பெட்டியைத் திறப்பதில்லைன்னுதான் புகார்...''



'உங்க படத்தோட கதை என்னோடதுன்னு பல பேர் புகார் சொல்லியிருக்காங்க? நீங்க என்ன சொல்றீங்க?''

'இன்னும் யாராவது வர்ராங்களான்னு பாருங்க சார்.. அப்புறம் பதில் சொல்றேன்...''



'எந்த இடத்துல சார் பிக்பாக்கெட் நடந்துச்சி...?''

'பஸ்ஸில் நான் நல்லா தூங்கிட்டதாலே எந்த இடமுன்னு சொல்ல முடியலை சார்...''

-வி.ரேவதி, தஞ்சாவூர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.